பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 60 -


ஐந்தாம் சருக்கம்

 


நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு

 
145. நாவலந் தீவு தன்னுள் நன்கயி ராவ தத்தின்
  மேவுமின் முகில்சூழ் மாட வீதசோ கப்பு ரத்துக்
  காவிநன் விழிமா தற்குக் காமன்விக் கிரம ராசன்
  தாவில் சீர் வணிகன் நாமந் தனதத்த னென்ப தாமே.

இந் நாவலந்தீவில் ஐராவதச் சேத்திரத்து ஆரிய கண்டத்திலே மின் தவழும் மேகக் குழாஞ் சூழ்ந்த மாடங்களையுடைய வீதசோக புரத்து அரசன் விக்கிரமன். நீலோற்பலம்போலும் விழிகளையுடையாள் அக் காமன் தேவி.  அந் நகரிலே புகழ்மிக்க வணிகன் தனதத்தன் என்பானாகும்.                  (1)

146. மனைவிதன் றனதத் தைக்கு மகனாக தத்த னாகும்
  வனைமலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் றேவிப்
  புனைமலர்க் கோதை நல்லாட் பொற்புடை வசும திக்கு
  மனையினன் மகடன் னாம மியன்நாக வசுவென் பாளம்.

அவன் மனைவி தனதத்தை.  இவர்கட்கு மகன் நாகதத்தன்.  அந் நகரத்து மற்றொரு வணிகன் வசுதத்தன்.  அழகிய வெற்றிமாலை சூடிய வேற்படையாளன்.  நன்மணமாலை அணிந்த அழகுடைய நல்லாள் வசுமதி அவன் தேவி.  இவர்கட்குப் புத்திரி நாகவசு எனப்படுவாள்.  (2)

147. நண்புறு நாக தத்த னாகநல் வசுவென் பாளை
  யன்புறு வேள்வி தன்னா லவளுடன் புணர்ந்து சென்றான்
  பண்புறு நற்ற வத்தின் பரமுனி தத்த நாமர்
  இன்புறும் புறத்தின் வந்தா ரிறைவனா லையத்தி னுள்ளே.

நண்புமிக்க நாகதத்தன் நற்குணம் மிக்க நாகவசு என்பவளை அன்புமிக்க  வேள்வி  விதியால்   மணஞ்செய்து   அவளுடன்   இனிது