நாககுமாரன்
தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும்
திரும்புதல்
154. |
அமையுநன்
கமைச்சன் சொல்லை யருமணி மார்பன் கேட்டு |
|
சமையுநாற் படையுஞ் சூழச் சாலலக் கணையி னோடும் |
|
இமையம்போற் களிற்றினேறி யினியநற் றோழன் மாரும் |
|
இமையவற் கிறைவன் போல வெழில்பெறப் புக்க வன்றே. |
இரத்தினாபரணம்
பூண்ட குமாரனும் அமைச்சன் சொல்லைக் கேட்டதும் நாற் படைகளும் புடைசூழ இலக்கணையோடும்
இமயமலை போலும் பெரி ய பட்டத்து யானைமிசை ஏறித் தன் தோழன் மார்களோடு இமையவர்க்கு
இறைவனைப் போலப் பொலிவோடு சென்று தாதை மாளிகை அடைந்தான்.
(10)
மகன்
நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல் வேறு
155. |
தாதையெதிர்
கொள்ளவவன் றாழ்ந்தடி பணிந்தான் |
|
ஆதரவி னன்மகனை யன்புற வெடுத்தும் |
|
போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே |
|
ஏதமில்சீ ரின்புற வினிதுட னிருந்தார். |
உடனே
தந்தையாகிய சயந்தர மன்னன் எதிர்கொண்டு அழைக்கக் குமாரனும் பணிவன்போடு அவர்
பாதங்களைப் பணிந்து தொழுதான். தாதையும் அன்போடு தன் மகனை மார்புறத் தழுவி யழைத்துக்கொண்டு
போய் அரண்மனை அடைந்து இனிதிருந்தனர். (11)
நாககுமாரன்
தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித்
துறவு பூணுதலும்
156. |
வெற்றியுடன்
வேள்விசெய்த வேல்விழியி னாரை |
|
யுற்றுடனே மாதரை யொருங்கழைக்க வந்தார் |
|
சித்திரநற் பாவையரைச் சேர்ந்துட னிருந்தான் |
|
பற்றறச் செயந்தரனும் பார்மகன் வைத்தான். |
|