வர்த்தமானரை
மன்னன் துதித்துப் போற்றுதல்
வேறு
16, |
பொறியொடுவல் வினைவென்ற புனித னீயே |
|
பூநான்கு
மலர்ப்பிண்டிப் போத னீயே |
|
புறவிதழ்சேர்
மரைமலர்மேல் விரனால் விட்டுப் |
|
பொன்னெயிலுண் மன்னியபுங் கவனு நீயே |
|
அறவிபணி
பணவரங்கத் தமர்ந்தாய் நீயே |
|
ஐங்கணைவில் மன்மதனை யகன்றாய் நீயே |
|
செறிபுகழ்சேர்
சித்திநகர் தன்னை யாளும் |
|
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே. |
ஐம்பொறிகளோடு கூடிய கொடிய வினைகளை யெல்லாம் வென்ற புனிதமானவன்நீதான்.
பொலிவுபெற்ற நான்கு பக்கங்களிலும் மலர்களுடைய அசோகின் நிழலில் அமர்ந்த ஞானி நீதான்.புறவிதழோடு கூடிய தாமரை மலரின்மேல், நால் விரலை மலர்த்தி அழகிய வசரணத்துறையும்
இறைவன் நீதான்.அறத்தன்மையுடைய நாகத்தின் பட நிழலில் வீற்றிருக்கின்றவன் நீயேதான்.ஐந்து மலரம்பும் கருப்பு வில்லும் கொண்ட மன்மதனை விலக்கிச் சென்றவன் நீதான்.மிக்க புகழ் வாய்ந்த சித்தி நகரை ஆட்சிபுரியும் சிரீவர்த்தமானன்
என்னும் பெயருடைய தூயோன் நீதான். (16)
17. |
கஞ்சமலர் திருமார்பிற் றரித்தாய் நீயே |
|
காலமொரு மூன்றுணர்ந்த கடவு ணீயே |
|
பஞ்சாத்தி
தானுரைத்த பரம னீயே |
|
பரமநிலை யொன்றெனவே பணித்தாய் நீயே |
|
துஞ்சாநல்
லுலகுதொழுந் தூய னீயே |
|
தொல்வினையெல் லாமெரித்த துறவ னீயே |
|
செஞ்சொற்
பாவையை நாவிற் சேர்த்தாய் நீயே |
|
சிரீவர்த்த மானெனுந் தீர்த்த னீயே. |
தாமரை மலரை
அழகிய மார்பில் தாங்கியவன் நீதான்.மூன்று
காலமும் உணர்ந்த கடவுள் நீதான்.பஞ்சாத்திகாயம்
உபதேசித்த பரமன் நீதான்.
|