உத்தரமதுரை:
சூரசேன நாட்டின் தலைநகர். இதனை 86ஆம் பாட்டில்
மதுரை என்று குறிப்பிடுதலும் கவனிக்கத்தகும் (75).
ஏழிறையிருக்கை
வட்டம்: தீர்த்தங்கரர்கள் வந்து வீற்றிருக்கும் சவமசரணமண்டலம்
(11).
ஐஞ்நூற்றுவர்
(இசைவாணர்): இன்னிசையாழ் வல்ல ஐந்நூறு இளைஞர். இவர் நாககுமாரன்
வடமதுரையில் உறைந்த காலத்தில் வந்து எதிர்ப்பட்டனர். இவர்கள் காம்பீரநாட்டு
அரசகுமாரி திரிபுவனாரதியிடம் வீணை வித்தையில் தோற்றுப் போய்த் தங்களூர் திரும்பிக்
கொண்டிருந்தனர் (88, 89).
ஐந்நூறு
படர்கள்: பூமி திலகமாபுரத்தில் வாயுவேகனை நாககுமாரன் வதைத்தபின் அவனிடம்
வந்து தஞ்சம் புகுந்தவர்கள். வாயுவேகனைக் கொல்பவன் எவனோ அவனே தங்களுக்குத் தலைவன்
என்னும் உண்மை யுணர்ந்ததனால், அவர்கள் அவ்வாறு செய்தனர் (139).
ஐராவதச்
சேத்திரம்: நாவலந் தீவிலுள்ள நாடுகளுள் ஒன்று(145).
கங்காள
நாடு: கங்கை நதியால் நீர்வளம் பெற்றுத் திகழ்ந்தது இந்நாடு.
இதன் கோநகரம் திலகபுரம். இங்கிருந்து ஆண்ட மன்னன் பெயர் விசையந்திரன் (142).
கணைவிழி: கிரிகூடபுர அரசன் வனராசனுக்கும் அவன் மனைவி வனமாலைக்கும் பிறந்த மகள். இவளை ‘இலட்சுமிதேவி‘
என்றும் அழைப்பர். நாககுமாரனுக்கு இவளை மன்னன் வேள்வி முறையால் மணமுடித்து வைத்தான்
(99).
கலிங்கம்: இரத்தினபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த நாடு (140).
கனகபுரம்: நாவலந் தீவிலுள்ள நற்பரத கண்டத்து நாடுகளுள் ஒன்றாகிய மகதநாட்டு நகரங்களுள்
ஒன்று. கூவும் குயில்களும் மதுதாரை சிந்தும் மலர்களும் கொண்ட சோலை சூழ்ந்த நகரம்
இது. இந் நகர்க்கு அதிபதியாக விளங்கியவன் சயந்தரன் (26,
27).
காம்பீரநகர்: இது காம்பீர நாட்டின் தலைநகர் (89).
காம்பீரநாடு:
இதன் தலைநகரத்தின் பெயரும் காம்பீரம் என்பதே. இங்கிருந்து அரசாண்டவன் நந்தனராசன்
(89).
காமகரண்டகம்:
வியந்தரதேவன் நாககுமாரனுக்கு நல்கிய அணி கலச்செப்பு (95).
கிரிநகர்:
அரிவரன் என்னும் அரசனுக்குரிய நகரம். இவ்வரசனின் மனைவி பெயர் மிருகலோசனை;
இவனுடைய புதல்வி பெயர் குணவதி (112, 113).
|