பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 81 -

சயந்தரன் சுதன்: கனகபுரச் சயந்தர மன்னனின் புதல்வன்; புகழ் மிக்க நாககுமாரன் (108).

சாலமிக்கமளி: நாகசயனம்; வியந்தரதேவன் நாககுமாரனுக்கு அளித்தது (95).

சிரீமதி I: சுராட்டிர நாட்டுப் பரங்கிரியாநகர் செல்வனின் மனைவி; இவளுடைய புதல்வி பெயர் பிரிதிதேவி என்பது.  இவளே நாககுமாரனை ஈன்ற தாய் (30).

சிரீமதி II: பாண்டி நாட்டுத்தென் மதுரையில் வாழ்ந்த அரசகுமாரி.  மேகவாகனனுக்கு அவன் மனைவி இலக்குமியிடமாகப் பிறந்த மகள். இவள் தன்னுடைய நடனத்தில் மிருதங்க வாத்தியத்தால் யாவனொருவன் வாசித்து வெற்றி பெறுவானோ அவனை மணப்பதாக உறுதி பூண்டிருந்தாள்.  இச்செய்தியை மாவியாளன்வழிக் கேட்ட நாககுமாரன் மதுரை நகரம் சென்று முழவிசைப் போட்டியில் வென்று, அவளை மணந்து கொண்டான் (132-133).

சிரீவர்மன் I: பாடலிபுர நகரத்து அரசன்; இவன் மனைவி பெயர் சிரீமதி என்பது.  இவர்களுடைய புதல்வியின் பெயர் கேணிகாசுந்தரி (கணிகை சுந்தரி) என்பதாம்.  சிரீவர்மன் தன்னை வந்து கண்ட வியாளன்-மாவியாளன் இருவருள் இளையனாகிய மாவியாளனுக்குத் தன் புதல்வியையும் மூத்தவனாகிய வியாளனுக்குத் தன் தாதி மகளாகிய இலளிதா சுந்தரியையும் வேள்வி விதிப்படியே திருமணம் செய்து கொடுத்தான் (78-80).

சிரீவர்மன் II: சுராட்டிர நாட்டில் பரங்கிரியா நகரில் வாழ்ந்த செல்வனாவன்.  இவன் மனைவி பெயர் சிரீமதி; இவர்களுடைய புதல்வி பெயர் பிரிதிதேவி (30).

சிரேணிகராசன்: இவன் மகதநாட்டு இராசமாகிரிய நகரிலிருந்து அரசாண்ட பேரரசன்; மாரிபோலக் கொடுக்கும் பெருங்கொடையாளன். இவன் ஆறிலொரு பங்கு மக்களிடம் வரி வாங்கினான்.  இவனுடைய பட்டத்தரசியின் பெயர் சேலினீ.  மற்றும் இவ்வரசனின் மனத்துக்கு இசைந்த மாதர் எண்ணாயிரம் பேர் இருந்தனர். இவன் பகைவர்களை அடக்கித் தன் நாட்டில் செங்கோல் வழுவாது அரசாண்டு வந்தனன். விபுல மலையில் வர வீரநாதர் எழுந்தருளியுள்ள செய்தியை வனபாலன் வழி அறிகிறான். செய்தி அறிந்த மன்னன்  முரசறைந்து செய்தி தெரிவித்து,  நாற்படை  சூழத்  தமது