பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 84 -
செயவதி  II: சுப்பிரதிட்ட நகரிலிருந்து ஆண்ட செயவர்மராசனின் தேவியாவள் (102).

செயவர்மன்: சுப்பிரதிட்ட நகரத்தை ஆளும் அரசன்; சொல்லாற்றல் பெற்றவன். இவனுடைய மனைவி பெயர் செயவதி. இவள் சித்திரப்பாவை போன்று சிறந்த அழகினையுடையாள். இவர்களுக்கு அசேத்தியர்-அபேத்தியர் என இரு புதல்வர் இருந்தனர் (102, 103).

செயவர்மா: சூரசேன நாட்டு அரசன்; இவனுடைய தலைநகரம் உத்தரமதுரை. இவன் பட்டத்தரசியின் பெயர் செயவதி. வியாளன் மாவியாளன் இருவரும் இவர்களுடைய புதல்வராவர் (75, 76).

சேலினீ: மகத நாட்டுச் சேணிகராசனின் பெருந்தேவி. இவள் கொண்டையிலே நறுமலர் சூடியவளாய் அன்ன நடையையும் வேல் போன்ற கண்களையும் உடையவளாயிருந்தாள்; முழுமதி போலும் முகத்தினாள் இவள். மன்னன் இவளுடன் கூடிச் சுகித்து இன்ப உவகையனாயினான் (9, 10).

சொர்ணமாலை: சுபசந்திரனுக்கும் சுகாவதிக்கும் பிறந்த மகளிருள் இவள் நான்காவது மகள். இவளைக் ‘கனகமாலை‘ என்றும் கூறுவர்.

சோமப்பிரபன்: இவன் வனராசனின் தாயத்தான்; புண்டபுரத்தை வசப்படுத்தி ஆண்டிருந்தவன். இவனை நாககுமாரன் தன் தோழனை அனுப்பி வெற்றி கொண்டான். நாடிழந்த சோமப்பிரபன் யமதரர் என்னும் முனிவரடி பணிந்து நல்லருள் சுரந்து பல்லுயிரையும் போற்றும் மாவிரதம் பூண்டு கடுந்தவம் இயற்றினான்.  இவன் ஒரு சமயம் சுப்பிர திட்ட நகரின் உய்யான வனத்தில் வேறுபல இருடியரோடு இருந்தான். அவன் துறவு மேற்கொள்ளக் காரணமாயிருந்தவன் சயந்தரன் புதல்வன் நாககுமாரன் என்பதனை அசேத்திய அபேத்தியர் அறிந்தனர் (101-108).

தத்தநாமர்: வீதசோகபுரத்துச் சினாலயத்துக்கு வந்த முனிவர். இவரைப் பரமாமுனிவர், முனிகுப்த ஆசாரியர் என்றும் கூறுவதுண்டு. இவரை நாகதத்தன் அடுத்து வணங்கி நல்லறம் கேட்டு, பஞ்சமி உண்ணாவிரத நோன்பு மேற்கொண்டான் (147, 148).

தரணிசுந்தரி: பூமி திலகமாபுரத்து விளங்கும் அருகன் ஆலயத்தில் வந்து ஒரு நிரையாய் நின்று அலறிப் பேரொலி செய்யும் ஐந்நூறு விஞ்சையர் கன்னியருள் ஒருத்தி. கப்பல் வணிகன் வாயிலாக இம் மங்கையர் செய்தி அறிந்த நாககுமாரன் அவ்விடம் சென்றான்; அலறும் மங்கையரிடம் நீவிர் அலறக் காரணம் என்ன என அவன் வினாவிய போது அவனுக்கு மறுமொழி பகர்ந்தவள் இவளே, “நாங்கள் பிரிதிவிதிலகம் என்னும் ஊரில் வாழ்ந்த வரதிரட்கன் மகளிர்; எங்கள் அம்மான் வாயுவேகன் தன் மகனுக்கு எங்களை மணஞ் செய்துதர வேண்டினான். எங்கள் தந்தை இசையாமையால் அவரைக்   கொன்று,   எங்களையும்   இந்த   வனத்தில்  அவன்  சிறை வைத்துள்ளான்;