பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 85 -

தன்னை மணக்குமாறும் கேட்டான்.  நாங்கள் எங்கள் பிதாவைக் கொன்ற உன்னைக் கொல்பவன் எவனோ அவனையே மணம் புரிவோம் என்றோம்.  இவ்வாலய வழிபாட்டிற்கு வரும் விஞ்சையராடவர் யாரேனும் எங்களுக்குப் புகலிடம் தந்து ஆதரிப்பர் என இவ்வாறு அலறிக்கொண்டு வருகிறோம்” என்று தங்கள் நிலைமையை விளக்கிக் கூறினாள்.  நாககுமாரன் வாயுவேகனை எதிர்த்துப் பொருது மாய்த்து, அக் கன்னியர் ஐந்நூற்றுவரையும் மணஞ்செய்து கொண்டான் (136-139).

தனதத்தன்: வீதசோகபுரத்திலிருந்து ஆண்ட விக்கிரமராசன் காலத்து வாழ்ந்த ஒரு வணிகன். இவன் குற்றமற்றவனாய் மிக்க பெருஞ்சீரும் சிறப்புடனும் வாழ்ந்தான்.  இவன் மனைவி பெயர் தனதத்தை. இவர்களுக்குப் பிறந்த மைந்தன் பெயர் நாகதத்தன் என்பதாம் (145).

தனதத்தை: வீதசோகபுரத்து வாழ்ந்த தனதத்தன் என்னும் வணிகனின் மனைவி.  இவளுடைய மைந்தன் பெயர் நாகதத்தன் என்பதாம் (146).

தாரணி: காம்பீர நாட்டு மன்னன் நந்தனராசனின் தேவி. இவளுடைய மகள் பெயர் திரிபுவனாரதி என்பது (89).

திகரம்பன்: சமணமுனிவன்; திக்கையே ஆடையாகக் கொண்டவன். அதாவது ஆடையற்றவன் என்னும் ஏதுப்பற்றி இப் பெயர் ஏற்பட்டது.  இவனைத் ‘தினையனைப் பற்றுமில்லாத் திகம்பரன்‘ என இந் நாககுமார காவியம் சிறப்பிக்கின்றது (45).

திரிபுவனாரதி: காம்பீர நாட்டு மன்னன் நந்தனராசனுக்குத் தாரணி என்பாளிடம் பிறந்த மகள். இவள் வீணை வித்தையில் சிறந்து விளங்கினாள். வீணைப் பயிற்சியுடைய ஐந்நூற்றுவர் இவளிடம் இசைப் போட்டியில் தோற்றுப் போயினர். இதனை அவர்கள் மூலமே அறிந்த நாககுமாரன் தன் தோழன் வியாளனுடன் காம்பீர நகரம் சென்று, வீணைப்போரில் வெற்றி பெற்றான். கற்புடைய அவளை மணந்து நாககுமாரன் இன்பந் துய்த்து மகிழ்ந்தான் (89, 90).

திலகபுரம்: கங்கை நீரால் வளம்பல பெற்றுத் திகழ்ந்த கங்காள நாட்டின் தலைநகரம். இங்குள்ள மாடங்கள் மிக உயர்ந்து திங்கள் தவழும்படியாக அமைந்திருந்தன. இங்கிருந்து அரசு செலுத்தியவன் விசையந்திரன் என்பவனாவன் (142).

தூமசேனர்: கடவுளுக்கு நிகரான பெருமையர்; அருந்தவம் புரிந்தவர்; அந்தரத்துலவும் ஆற்றல் பெற்றவர். இவர் செயவர்மாவின் ஊராகிய உத்தரமதுரைக்கு ஒரு சமயம் வந்தார். அவன் முனிவரடி பணிந்து அவருரைத்த அறவமுதம் உண்டான். முனிவரை நோக்கி அவ்வரசன், ‘என் புதல்வர் இருவரும் இனிதரசாள்வரோ, அன்றிப் பிறருக்குத் தொண்டு புரிவரோ?‘ எனக் கேட்டான். அதற்கு மறுமொழியாக அம் முனிவர்,