கலிநிலைத்துறை
பச்சைநி
றப்பைந் தொடிவல மேவிய பசுபதியுள்
நச்சின ரொன்றினும்
எச்சமு றாதருள் நனிகூர்வான்
கச்சியு றைந்தருள்
கண்ணுதன் மறலிக் கண்டகனால்
அச்சமு றாதடி
யவர்முனம் அந்தத் தணுகுவனே. (71) |
(இ - ள்.)
பச்சை நிறம் பைந் தொடி - பசிய நிறத்தையுடைய பார்வதி, வலம் மேவிய - தன் இடப்பக்கத்தே
விரும்பியுறையத் தான் அவள் வலப்பக்கத்தே விரும்பி யுறைதலைப் பொருந்திய, பசுபதி
- உயிர்களுக்குத் தலைவன், உள் நச்சினர் - தன்னை மனத்தில் எழுந்தருள வேண்டும் என
விரும்பி வழிபாடு செய்தவர், ஒன்றினும் - அவ்விருப்பத்தில் சிறிதும், எச்ச முறாது-குறைவு
அடையாது, நனி அருள் கூர்வான் - அவருள்ளத்தே எழுந்தருளிச் சாலவும் அருள் செய்பவனாய்,
கச்சியு றைந்தருள் கண்ணுதல் - காஞ்சியில் எழுந்தருளும் நெற்றிக் கண்ணனாகிய ஏகாம்பரநாதன்
ஆவான், மறலிக் கண்டகன் - அவன் எமனுக்கும் எமனாவன், ஆல் - ஆகையால், அச்சம் உறாது
- அச்சம் உறாது - அச்சம் அடையாதபடி, அடியவர் முனம் - அடியவரிடத்து, அந்தத்து - (எமன்
உயிரைப் பற்ற) இறக்கும் நேரத்தில், அணுகுவன் - அடைந்து அவ் வெமனிடமிருந்து அவரை
விடுவித்துத் தன்பால் சேர்த்துக்கொள்ளுவான்.
இனி, அருள் மிகுதியும் செய்யும் பொருட்டுக் கச்சியுள்
உறையும் நெற்றிக்கண்ணன் எனினும் பொருந்தும்.
பைந்தொடி - பசும் பொன்னாலாகிய வளையலணிந்த பார்வதி
(பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.)
மேவுதல் - விரும்பி யுறைதல். ‘நம்பும் மேவும் நசையாகும்மே’
என்பது தொல்காப்பியம்.
பார்வதி இடப்பாகத்தை விரும்ப அங்ஙனமே தந்த இறைவன்,
தன்னை நச்சினர் உள்ளெழுந் தருளவேண்டின் அங்ஙனமே எழுந்தருளிக் காப்பான். அவன்
உள்ளிருக்குங்கால், எமன்வரின், அவன் காலகாலனாதலால் அவனிடமிருந்து காத்துத் தன்னடிகளில்
சேர்த்துக்கொள்ளுவான் என்க. |