நூல்
(ஒருபோகு
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)
இது தரவு.
பூமேவு
நான்முகனும் புயங்கவணை மாதவனு
மாமேவு நினதுமுடி
மலரடிகா ணாத்திறத்தை
ஆராயும் அறிவினரே?
அம்பலக்கூத் தாட்டினையும்,
வாரார்ந்த
தனத்துமையாள் மகிழ்ந்துறையு மாட்டினையும்,
கழையிழைத்த
வில்லானின் கண்ணினுறு கேட்டினையும்,
பிழையிழைத்த
முப்புரத்தார் பீடழிந்த பாட்டினையும்,
அறமேய மால்விடையா
யம்புதமா யம்பாகித்
திறமேய தேவியுமாய்ச்
சேர்ந்தவருங் கூட்டினையும்,
கல்லடித்தார்
சிலையடித்தார் கண்பறித்தார் முதலடியர்
தொல்லைநிலம்
பிறவாமே துயரறுத்த பீட்டினையும்,
பாற்கடலி
னமுதெழுமுன் பகைத்தெழுந்த ஆலத்திற்
கேற்கவிடம்
அமைத்தமரர்க் கின்புறச்செ யூட்டினையும்,
கிழக்குவடக்
கறியாத கீழ்மையருஞ் சிறப்பெய்தி
வழக்குமிடப்
புரியுணர்வு வாய்ப்பளித்த தீட்டினையும்,
அறிபவராம்
அன்றியெம்போல் அறிவற்ற சிறியவர்வீ
டுறுவகைமற்
றில்லையென உணர்ந்தெளிது காட்சிதரீஇ
மாகம்பத்
தொடுமிறைஞ்சி வழிபாடு செயவுமையோ
டேகம்பத்
தொருமாவின் இனிதுவீற் றிருந்தருள்வோய்! (3) |
(இ-ள்.)
பூ மேவும்-தாமரை மலரில் விரும்பி யுறையும், நான்முகனும்-பிரமனும், புயங்க அணை மாதவனும்
- பாம்பாகிய படுக்கையில் விரும்பி யுறையும் திருமாலும், மா மேவும் - பெருமைக் குணம்
விரும்பி யுறையும், நினது முடி - உனது தலையையும், மலரடி - தாமரை மலர் போன்ற திருவடிகளையும்,
காணா - காண மாட்டாத திறத்தை - வரலாற்றினை, ஆராயும் அறிவினரே-ஆராய்ந்து பார்க்கும்
அறிவுடையவர்களே, அம்பலக் கூத்தாட்டினையும்-திரு அம்பலத்தில் கூத்து நிகழ்த்துதலையும்,
வார் ஆர்ந்த-கச்சு இறுகக் கட்டிய, தனத்து உமையாள் - கொங்கைகளை யுடைய உமை யம்மை,
மகிழ்ந்து - உறையும் - தங்கும், மாட்டினையும் - (இடப்) பக்கத்தினையும், கழை வில்
இழைத்தான் - கரும்பாகிய வில்லை வளைத்துத் தவறு செய்தவனாகிய மன்மதன், கண்ணின்
உறு - நினது நெற்றிக் கண்ணால் உற்ற, கேட்டினையும் - கெடுதியையும், பிழை இழைத்த
- தேவர்களுக்குத் தவறு செய்த, முப் புரத்தார் - திரி புராதிகள், பீடு அழிந்த பாட்டினையும்
- பெருமை குலைந்த இயல்பினையும், மால் - திருமால், அறம் மேய வடிவாய் - தரும விடையாகியும்,
அம்புமாய் - மேக வாகனமாகியும், அம்பாகி - திரிபுரம் எரிக்க அம்பு வடிவாகியும்,
திறம் மேய - ஆற்றலோடு பொருந்திய, தேவியுமாய் - தேவியுமாகியும், சேர்ந்த-பொருந்திய,
அருங் கூட்டினையும்-அருமையாகக் கூடி யிருத்தலையும்,
|