நம் கழை இழைத்த வில்லான் என்பது விகுதி பிரித்துக்
கூட்டாமல் கழை வில் இழைத்தான் என நின்றது.
அறம் மேய மால் விடை:
சிவனார் திரிபுரம் எரிக்கச் சென்ற போது தேரின் அச்சு முறியவே, திருமால் அறத்தின்
வடிவமான இடபமாக நின்று சிவபிரானைத் தாங்கினர் என்பது புராணம். சிவனுக்குத் திருமால்
சத்தி வடிவம் ஆவார்: ‘அரியலாற் றேவி யில்லை ஐயனை யாற னார்க்கே’. ஐயாறு - திருவையாறு.
அம்புதம்: மேகம். - மேக வாகன கற்பத்தில் திருமால் சிவனை மேக உருக்கொண்டு தாங்கினர்.
(அபிதான சிந்தாமணி) பாற் கடலின் அமுது எழுமுன் - பாற் கடலினின்று தோன்றிய இனிய
அமுது அப் பாற்கடலினின்று தோன்றுமுன்.
ஆலத்திற்கு ஏற்ற இடம்:
மிடறு, மிடறு என்பது மிணறு என்று திரிந்து வழங்குகின்றது. ஒரு மிணறு தண்ணீர் குடி.
வாய்ப்பும் ஆம். வாய்ப்ப
அளித்த: அகரம் தொக்கது. தரீஇ - சொல்லிசை அளபெடை: வினையெச்சப் பொருளது. ஆராயும்
அறிவினர் (எழுவாய்), கூத்தாட்டினையும் ......... வாய்ப்பளித்தத் தீட்டினையும் அறிபவராம்
அன்றி, சிறியவர் உணர்ந்து தரீஇ இறைஞ்சி வழிபாடு செய்ய மாவின் வீற்றிருந்தருள்வோய்!
(கேள்) என வினை முடிபு செய்க.
இது 18 அடித் தரவு.
அமுதம் உயிரைக் காப்பதாகலின்,
உயிரைப் போக்குவதாகிய ஆலம் எழுந்ததைப் ‘பகைத் தெழுந்த’ என்றார்.
|