அராகம்
- 4.
உரையிட
அரியதொர் அனலுரு ஒளிதர
வரைமகள்
இடமுறு வகைபுரி அளியினை.
|
1 |
நிழலிடு
தருவடி நிலைபெறு கருணையை
வழிபடு மவர்பெற
அருள்பர வெளியினை. |
2 |
பகலவன்
அனலவன் நிறைமதி பரிவுறு
தகவமை உரைமிகு
தமனிய ஒளியினை.
|
3 |
பழமறை
ஒலிகெழு பலதலம் அருள்பயன்
அழகுற அருளிவண்
அமர்தரு களியினை. |
4 |
(இ-ள்.)
(1) உரையிட - சொற்களினால் பிறர் வரையறுத்துக் கூற, அரியது - இயலாதது ஆகிய, ஓர்
- ஒப்பற்ற, அனலுரு - தீவண்ணமாகிய வடிவம், ஒளிதர - தீக்குரிய சுடுந்தன்மையும்
விளங்கும் தன்மையும் ஆகிய இரண்டனுள் சுடுந்தன்மை நீங்கி விளங்குந் தன்மை யொன்றுமே நிற்க,
வரை மகள் - மலை மகளாகிய பார்வதி, இடம் உறு வகை - இடப்பக்கம் பொருந்தும்படி,
புரிஅளியினை - அவளன்பு கருதிச் செய்த அருளை உடையாய். பிறரால் அளவிட்டுச் சொல்ல
முடியாததாகிய அனல் வடிவாயிருந்தும், பார்வதிக்கு அவளன்பு கருதி சுடுந்தன்மை நீக்கி
உன் இடப்பாகத்தைத் தந்தருளும் குளிர்ச்சி உடையாய்.
(2) நிழல் இடு - நிழலைச் செய்கின்ற, தரு அடி -
(மா) மரத்தின் அடியில், நிலைபெறு - நிலைபெற்றிருக்கின்ற, கருணையை - அருளை உடையாய்,
வழிபடு மவர் - (நின்னை) வழிபடும் அவர், பெற - அடைய, அருள் - அருளுகின்ற, பரவெளியினை
- பர வெளியினை உடையாய், பர வெளி1
என்றது சிதாகாசத்தை.
(3) பகலவன் - சூரியன், அனலவன் - நெருப்பு, நிறை
மதி - நிறை நிலா, (ஆகிய இவைகள்) பரிவுறு - விரும்பத்தக்க, தகவு அமை - பெருமை வாய்ந்த,
உரை மிகு - மாற்று உயர்ந்த, தமனிய ஒளியினை - பொன்னின் ஒளிபோலும் ஒளியை உடையாய்.
சூரியன், அக்கினி, சந்திரன் இவை மூன்றும், தம் மொளியினும்
சிறந்த ஒளியை உடையன் கடவுள் ஆதலால் நின்னை விரும்பும் ஒளியையுடையாய் என்றார்.
இனிச் சூரியன், அக்கினி, சந்திரன் இவை மூன்றும் மூன்று
கண்களாக நின் முகத்தில் விரும்பி அமையப்பெற்ற தகுதி அமைந்த பொன்னார் மேனியை
உடையாய் எனலுமாம்.
(4) பழ மறை - பழைய வேதங்களின், ஒலி கெழு - முழக்கம்
நிறைந்த, பல தலம் - பல தலங்கள், அருள் பயன் - அருள் செய்யும் பயனை எல்லாம்,
அழகுற - அழகாக, இவண் - இந்தக் காஞ்சியாகிய ஒரு தலத்தில் ஒரு மாமரத்தின் அடியில்,
அமர் அருள் தரு - விரும்பி எழுந்தருளி அருளுகின்ற, களியினை - ஆநந்தக் களிப்புடையாய்.
எல்லாத் தலங்களும் தரும் எல்லாப் பயன்களும் ஒரு சேரக்
காஞ்சிமா நகரம் தரும் என்றபடி.
‘ |
கச்சி படுவ கடல்படா; கச்சி
கடல் படுவ எல்லாம் படும்’ |
என்பதும் காண்க. (தண்டி மேற்கோள் வேற்றுமையணி)
காஞ்சியில் கிடைக்கும்
பொருள்கள் கடலிற் கிடைக்கமாட்டா, ஆனால் கடலில் கிடைக்கும் பொருள்களெல்லாம்
காஞ்சியில் கிடைக்கும். எனவே காஞ்சி சிறந்தது என்றபடி.
1
பர வெளி: அறிவு அடங்கிய நிறைவுடைய மேலான
இடம்.
|