பக்கம் எண் :

25

Kachchik Kalambagam

(2) பணி அணிந்தாய் - அச்சுறுத்தும் பாம்பினை அணிகலன்களாக அணிந்தாய், அதை அந்தப் பாம்பினை, விற் பற்றி - மேருமலையை வில்லாகக் கையில் பற்றி, கயிறாக - அவ் வில்லை வளைத்தற்கு நாணாக, இசைத்தாய் - அமைத்துக் கொண்டாய். மந்தரத்தே - மந்தரமலையை , (மந்தரமலையை மத்தாகக் கொண்டு பாற் கடலைக் கடைய அந்த மத்தில்) திணியவைத்தாய் - கயிறாகச் சுற்றிக் கொள்ளச் செய்தாய். இவையெல்லாம் செய்த உனக்கு, நஞ்சுணவும் - (அப்பாம்பு) கக்கிய நஞ்சை உணவாகக் கொள்ளுதலும், சிறப்பாமோ-நினக்குச் சிறப்புடையதாகுமோ?

அந்தப் பாம்பு நஞ்சு கக்கியதால் சூழ இருந்த வானவர் ஓடினர். நீ நஞ்சை உட்கொண்டனை: நஞ்சினைத் தரும் பாம்பினையே நீ விரும்பியபடியெல்லாம் ஆண்ட நினக்கு அது கக்கிய நஞ்சினை உட்கொள்ளல் எளிதே.

உணவும் - உண்ணுதலும்: தொழிற்பெயர் உம்மை யேற்று நின்றது.

ஓகாரம் வினாவோடு எதிர்மறை.

(3) மால் - திருமால் ஆனவர், உலகங் காக்க - உலகத்தைக் காக்கும்படி, நரமடங்கல் - (இரணியன் பொருட்டு) நரசிங்கமாக உருக்கொள - வடிவங்கொள்ள, அம்மாலால் - (பிறகு) அத்திருமாலால், உலகுக்கு - உலகத்திற்கு, ஆன துயர் - உண்டாகிய துயரத்தை, அகற்ற வல்லார் - நீக்க வல்லவர்கள், வேறு உளரோ - நின்னையன்றி வேறு இருக்கின்றனரோ? (இல்லையன்றே)

நரமடங்கல் - நரசிங்கம்: நரசிங்கமூர்த்தி இரணியனைக் கொன்று அவன் குருதியை உண்டமையால் வெறிகொள்ள, அதனால் உலகத்திற்கு நிகழ்ந்த துயரத்தை நீக்க நின்னை யன்றி வேறு யார் உளர்?

(4) மகிழிருந்தாய் - மகிழ்ச்சியோ டிருந்தவனே, மனை என்றோ - மனைவி என்று கருதியோ, மாசுணம் - பாம்பாகிய ஆதிசேடன் மீது, துயின்றானுக்கு - பள்ளிகொண்ட திருமாலுக்கு அகங்கனிய - மனம் குழையும்படி, சங்கு ஆழி-சங்கும் சக்கரமும், ஆண்தகை - ஆண் தன்மையை உடையவனே, முன் அருளியது - முன் கொடுத்தது. (மனைவி-சக்தி) [சங்கு சக்கு? (கண்). திருமால், தன் கண்ணைப் பிடுங்கிச் சிவனை அருச்சித்தபோது சிவபிரான் சக்கரம் அளித்தனர். இது நிகழ்ந்த தலம் திருவீழிமிழலையாகும். சங்கு-சக்கின் பொருட்டு.]

தேவாரம்.

திருவீழி மிழலையில் தன்னை அருச்சித்த திருமாலுக்குச் சக்கரம் அளித்தான் என்பதே வரலாறாக, சங்கும் அளித்தான் என்றது, தன்னை அருச்சித்தற்குப் பிடுங்கிய கண்ணாகிய சக்கு (சக்ஷு-கண்) வினையும் மீண்டு அளித்துக் காப்பாற்றினான் என்றவாறு.

மகிழிருந்தாய் என்றதும் மகிழமரத்தின் கீழ் இருந்தவரே என்றும் பொருள்படும். இது சுந்தரர் பொருட்டு நிகிழ்ந்தது.

மகிழ், மகிழ்ச்சி என்ற பொருளில் முதனிலைத் தொழிற் பெயர்.


Untitled Document