(3) புரையறு - குற்றமற்ற, தசை - (கண்ணப்பர் படைத்த)
இறைச்சியை, மிகை - மிகுதியாக, உண்டனை - உண்டாய்.
(4) புணர்வுற - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்று
நான்காகக் கலந்து கிடக்க.
அருமறை - அரிய வேதங்களை. விண்டனை - வெளியிட்டனை.
(தெளிவுபடுத்தினை)
வியாசர் நான்காகப் பிரித்ததற்குமுன் எல்லாம் ஒருங்கே
யிருந்தனவாதலால் ‘புணர்மறை’என்றார்.
(5) மணிமிடறு - அழகிய கழுத்தில், ஆர்தரும் - பொருந்திய, இருளினை - நஞ்சினது இருள் நிறம் உடையை.
மணிமிடறு - நீலமணி போலும் மிடறு
எனினுமாம். ஆர்தரும் - பொருந்திய; ஆர்தா பகுதி.
இருள் பண்பாகுபெயராய் விடம் எனினும் அமையும். ‘மணிமிடற் றெண்கையாய் கேளினி’ என்பது கலித்தொகை. |
(6) மலைவளர் - மலையரையன் பெற்று வளர்க்கின்ற, காதலி
- மகளாகிய பார்வதியிடத்து, மருளினை - காதல் மயக்கம் கொண்டனை.
(7)மறையொளிர் - வேதத்தில் விளங்குகின்ற, தோம்அறு
- குற்றமற்ற, பொருளினை - பொருளையுடையை. (மறை - நான்குவேதம்) அவையாவன. ருக், எசூர்,
சாமம், அதர்வணம் என்பன.
(8) மகிழொடு - மகிழ்ச்சியுடன், மா - மாமரத்தின் அடியில்,
அமர் - தங்கிய, அருளினை - அருளை உடையை.
இரட்டுற மொழிதலால்,
மகிழொடு - ஒற்றியூரில் மகிழமரத்தின் அடியிலும், மா - காஞ்சியில் மாமரத்தின் அடியிலும் தங்கியவர் எனினும் அமையும்.