(தனிச்
சொல்,) என ஆங்கு
(இ-ள்.)
என ஆங்கு - (தனிச் சொல்,) அசை நிலை என்பர் உரையாசிரியர் பலரும். எனினும், மேலே
அம்போதரங்கங்களில் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை ஒருவகை இசையால் (ஓசையால்) கூறிப்
பின் வேறுவகை நடையைத் தொடங்குதற்கு இடையில் இந்த என ஆங்கு வருதலால், இருவகை இசைகளையும்
இசைக்கும் பொருளுள்ள அசையே என்று கொள்ளுதல் கூடும்.
நேரிசை
ஆசிரியச் சுரிதகம்.
ஆரண, அகில காரண, பூரண,
நாரணன் அறியா நாயக, வேயக
முத்தே, அறத்தின் வித்தே, முக்கட்
சித்தே, சத்தே, எத்தே வரும்பணி
அத்தா, அன்னாய், அளிக்கொரு வைப்பே,
கத்தா எனக்கூய்க் கண்ணீர் ததும்ப
உள்ளநெக் குருக உரோமம் சிலிர்ப்ப
விள்ளற் கருநின் மேன்மையைப் புகழும்
பாவலர் தமக்குப் பழவநு கூல,
மேவலர் வேரற வீறிய சீல,
மாதுமை பங்குறு மாண்புடைச் சீரிய,
தீதெமை அணுகாத் திறமருள் ஆரிய,
நால்வர் இசைத்தமிழ் நலனறி நாத,
மால்வரை மங்கை மணாள, நீத,
கொன்றைத் தொடையணி கோனே, பசுபதி,
குன்றைக் குழைத்த கோதறு குணநிதி!
கல்லாப் புல்லேன் கனிவறு மனத்தேன்
எல்லாப் பிழையும் இயற்றும் ஏழையாற்
சொல்லப் படுமோ சொலற்கரு நின்புகழ்;
புல்லப் படுமோ புரையறு நின்பதம்;
உன்னப் படுமோ உத்தம! நின்எழில்;
பன்னப் படுமோ பகவ! நின் அருள்;
பாடப் படுமோ பண்ணவ! நின்சீர்;
தேடப் படுமோ சேவடி; எனினும்
அல்லுறு நஞ்சர வக்கு மத்தமும்
புல்லும் உவப்புடன் புனைந்தெனக் கனிந்து
சிற்றறி வினனுரை செய்யுளை
முற்றும் நயப்பாய் மூவர்க் கையனே!
|
(இ-ள்.)
ஆரண - மறை வடிவனே. அகில காரண - எல்லாவற்றிற்கும் பொருளானவனே, பூரண - எங்கும்
நிறைந்துள்ள இன்பப் பொருளே. (எங்கும் நிறைந்திருப்பவனே)
நாரணன் அறியா - திருமாலால் அறியப்படாத, நாயக -
தலைவனே, வேய் அகம் முத்தே - மூங்கிலிடத்தே தோன்றிய முத்தே, வேய் - மாடம் -
மாடக்கோயில். வேய் அகம் - மாடக்கோயிலில் விளங்கும், முத்தே - முத்தே. (எண்டோள்
ஈசற்கு எழின் மாடம் எழுபது செய்து (பெரிய திருமொழி) 6-6-8.
வேய் வனத்தில் முளைத்த முத்தே - (வேய் வனம் - திருநெல்வேலித்,
திருவூர்)
|