திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
14

ஒன

ஒன்றும் இன்றி இறைவனை நினைந்து அமர்ந்திருந்தனர். அவருடைய நிலைமையை அறியாமல் பெற்றோர் மிக வருந்தியிருந்தனர். அந் நிலைமையில் மற்றொரு நிகழ்ச்சி நிகழ்வதாயிற்று.

    மதுரகவிகள் என்பவர், திருக்கோளூர் என்னுந்திருப்பதியில் அந்தணர் குலத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், நம்மாழ்வார் அவதாரத்திற்குச் சில ஆண்டுகள் முன்னரே அவதரித்திருந்தார். அவர் தக்க காலத்தில் நான்மறை ஆறங்கம் முதலியனவும், தமிழ் நூல்களும் கற்றுத் தேர்ந்து, இறைவன் எழுந்தருளியுள்ளதும், முத்தி தரும் நகரம் எனச் சிறப்பித்துக் கூறப்படுவதுமான திருவயோத்தி முதலிய திருப்பதிகளில் இறைவனை வணங்க எண்ணிச்சென்று, கங்கைக்கரையில் தங்கியிருந்தார். அவர் ஒரு நாள் இரவில் வெளியே வந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் கண்டு ஆச்சரியமடைந்தார். மறுநாளிரவிலும் அவ்வாறே அவ்வொளி தோன்றிற்று. உடே்ன மதுரகவிகள், ‘தெற்கே ஏதோ ஓர் அதிசய நிகழ்ச்சி இருக்கிறது! அதனைச் சென்று காணுதல் வேண்டும்,’ என்றெண்ணினார். அன்று முதல் அவர் பகலில் உறங்குவதும், இரவில் அவ்வொளியைப் பார்த்துக்கொண்டே வழி நடப்பதுமாகப் பல நாள் நடந்து வந்தார். திருக்குருகூர் வந்ததும் இரவில் அவ்வொளி தோன்றவில்லை. பின்னர், மதுரகவிகள் அவ்வூரிலுள்ளவர்களிடம், “இங்கு ஏதேனும் அதிசய நிகழ்ச்சி உண்டோ?” என்று வினவி அறிந்து, திருப்புளியின்கீழ் எழுந்தருளியுள்ள நம்மாழ்வாரைக் கண்டார்.

    ஆழ்வார் கண் விழித்தல் பேசுதல் முதலிய செயல் ஒன்றும் இன்றி மௌனமாய் இருத்தலைக் கண்டு, அவருடைய நிலைமையை ஆராய்ந்தறிய எண்ணி, ஒரு கல்லை எடுத்து அவர்முன் இட்டு ஒலி உண்டாக்கினார். உடனே நம்மாழ்வார் கண் விழித்துப் பார்த்தார். பின்னர் மதுரகவிகள் அவரோடு பேசி அறிய எண்ணிச்

        ‘செத்ததன் வயிற்றிற் சிறியது பிறந்தால்
        எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’


என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார்,

        ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’

என்றார்.

    செத்தது - உடல், உடம்பு மூலப்பகுதியின் விகாரமாய் உள்ளது; அறிவற்றது; அதனால், அதனைச் ‘செத்தது’ என்றார். சிறியது - உயிர். உயிர் அணு வடிவின தாயுள்ளது;-அது உடம்பு முழுவதும் தன் ஞானத்தினால் வியாபித்து, உடம்பு முழுவதிலும் நடை பெறுகிற நிகழ்ச்சிகளை அறிகிறது; அதனால், அதனைச்