|
New Page 1
‘சிறியது’ என்றார்.
பிறத்தல்-உயிர் தன் வினைகளுக்கு ஏற்ப உடம்பை அடைதல். எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? (அவ்வாறு
உடம்பையடைந்த உயிர் எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என்றார்.
‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’-உடம்பை அடைந்த உயிர் தன் வினைப்பயனை
அநுபவித்துக்கொண்டு, அவ்வுடம்பிலேயே இருக்கும் என்பது நம்மாழ்வார் விடை. (உயிர் அவ்வப்பிறப்பிற்குரிய
வினை முடியும் வரை அவ்வவ்வுடம்பில் இருக்கும் என்பது கருத்து.)
அவ்வாறு ஆழ்வார் கூறிய விடையைக் கேட்ட மதுரகவிகள், மிக்க மகிழ்ச்சி
அடைந்து, ஆழ்வாரை ஆசாரியராகக் கருதி, அவரை வணங்கி அவரிடத்தே இருந்தார். அப்படியிருந்த
மதுர கவிகளுக்கு நம்மாழ்வார், ‘சித்து, அசித்து, ஈசுவரன்’ என்னும் தத்துவம்
மூன்றன் இயல்புகளை எல்லாம் விரிவாக உபதேசித்தார். மற்றும் அறிய வேண்டிய பல உண்மைகளையும்
உபதேசித்தருளினார்;
இவ்வாறு உலகியலைச் சிறிதும் நினையாது, இறைவனையே எண்ணிஎழுந்தருளியிருந்த
ஆழ்வார், அவ்விறைவனை நினைத்தலால் உண்டான பெருமகிழ்ச்சியினால் அவனைப்பற்றிக் கவி பாடத்
தொடங்கினார். அக்கவிகளே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
என்னும் நான்கு பிரபந்தங்களாய் வழங்குகின்றன. நான்கு வேதங்களின் சாரமாக இந்நான்கு பிரபந்தங்களும்
அமைந்துள்ளன என்பது அறிஞர் கொள்கை.
ஒவ்வோர் ஆழ்வாரைப்பற்றியும் கூறும்போது, அவர் ஏனையர் எல்லாரினும்
மிகச்சிறந்தவர் என்று கூறுவது உண்டாயினும், நம்மாழ்வாரே மற்ற எல்லாரினும் சிறந்தவர் என்பது
பொதுவாக எல்லாருடைய கருத்துமாகும். ஏனைய ஆழ்வார்களுள் ஒவ்வொருவரையும் ஒவ்வோர் அவயவமாகவும்,
நம்மாழ்வாரை அவயவியாகவும் கூறுகின்றனர். ‘பிரபந்த ஜன கூடஸ்தர்’ என்று நம்மாழ்வாருக்கு ஒரு
சிறப்புப்பெயர் உண்டு. ‘பிரபத்தி மார்க்கத்தை அநுஷ்டிக்கும் வைணவர் எல்லோருக்கும் தலைவர்,’
என்பது பொருள். ஆழ்வார்களுடைய நூல்கள் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு வகையாகப் பெயர் கொடுத்த
அறிஞர், நம்மாழ்வாருடைய நான்காவது நூலிற்குத் திருவாய்மொழி எனச் சிறப்பாகப் பெயர் இட்டனர்
: வாய்மொழி - வேதம். திருவாய்மொழி - மற்றைய வேதங்களினும் மிக்க சிறப்புடைய வேதம் என்பது
கருத்து. நம்மாழ்வாருடைய பெருமைகளையும், அவர் நூல்களின் பெருமைகளையும், அவற்றுள்ளும்
|