திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
17

மந

மந்திரத்தில் மிக முக்கியமான நடுப்பதத்தின் பொருளை விளக்குவதாகக் கொண்டுள்ளனர்.

    மதுரகவிகள் இவ்வுலகத்தில் உள்ள அளவும் நம்மாழ்வாருக்குத் திருக்கோயில் அமைத்து வழிபாடு எல்லாம் செய்துவந்தார்.

    நம்மாழ்வார் அவதரித்த காரணத்தால், திருக்குருகூர், அப்பெயர் வழக்கு மாறி, ‘ஆழ்வார் திருநகரி’ என்ற பெயரானே வழங்கப்படுகின்றது. திருக்குருகூர் என்னும் பெயர் நூல் வழக்கில் மட்டுமே உளது.

    இப்பெரியாரது காலம், கி. பி. ஏழாம் நூற்றாண்டு என்று சரித்திர அறிஞர் கூறுவர் 5,6-ஆம் நூற்றாண்டுகளின்பின் முன் பகுதிகளில் வாழ்ந்திருந்தவர்களான பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற மூவரும் தம் நூல்களை வெண்பாவாலேயே அருளிச் செய்திருத்தலும்; 6, 7-ஆம் நூற்றாண்டுகளின் பின் முன் பகுதிகளில் வாழ்ந்திருந்தவரான திருமழிசைப்பிரான், தம் நூல்களை வெண்பா, கலிப்பா என்னும் இருவகைப் பாக்களால் அருளிச்செய்திருத்தலும்; நம்மாழ்வார், தம் நூல்களை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா என்னும் மூவகைப் பாக்களால் அருளிச்செய்திருத்தலும்; ஏனைய ஐவரும் தம் நூல்களை வெண்பாவால் அருளிச்செய்யாமையும் ஈண்டுச் சிந்தித்தல் தகும். மேலும், ஒன்பதாம் நூற்றாண்டில் (கி. பி. 825இல் அவதரித்தவர்) வாழ்ந்திருந்தவரான ஸ்ரீமந் நாதமுனிகள், ‘திவ்வியப் பிரபந்தங்களைப் பெறல்வேண்டும் என்னும் பெருவிருப்போடு சடகோபர் அவதரித்தருளின திருக்குருகூர்ப் பிரதேசத்திலே உண்டாகவேணும் என்று திருநகரிக்கு எழுந்தருளினார் என்றும், அங்கே ஆழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் சேவித்து, ஸ்ரீமதுரகவிகளுடைய சிஷ்யரான ஸ்ரீ பராங்குச தாசரைக் கண்டு, ‘இவ்விடத்துத் திருவாய்மொழி ஓதினவர்கள் உண்டோ? ஸ்ரீகோசம் உண்டோ? என்று கேட்டருள, அவரும், ‘திருவாய்மொழியும் மற்றுமுள்ள திவ்வியப்பிரபந்தங்களும் நெடுங்காலமுண்டு பிரமுஷிதமாய்த்து,’ என்று கூறினார் என்றும் வரலாறு கூறும் உண்மையையும் ஈண்டு நோக்குக. மேலும்,

        ‘பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
         அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் - துய்யபட்ட
         நாதனன்பர் தாள்தூளி நற்பாணன் நற்கலியன்
         ஈதிவர்தோற் றத்தடைவாம் இங்கு.’


என்று மணவாளமாமுனிகள் நம்மாழ்வாரை ஐந்தாம் எண்வரிசையில் வைத்து அருளிச்செய்திருத்தலும் அதனை வலியுறுத்தும்.