திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
முதல் தொகுதி
18

The Tamil rendering of this passage is as follows

நம்மாழ்வாரும் திருவாய்மொழியும்

   ஆழ்வார் எல்லாரும் பெரிதும் போற்றப்படுபவராயினும், அவர்களுள் நம்மாழ்வார் மிகச் சிறந்தவராகப் போற்றப்படுகின்றார். அவருடைய நூல்களும் அவ்வாறே போற்றப்படுகின்றன. அவருடைய நூல்களுள்ளும் திருவாய்மொழி மிகச் சிறப்பாகப் பாராட்டப் படுகின்றது. நம்மாழ்வாரையும் அவருடைய திருவாய்மொழியையும் பாராட்டித் தமிழிலும் வடமொழியிலும் பல நூல்கள் தோன்றியுள்ளன. நம்மாழ்வாரது காலத்திலேயே, அவருடைய சிஷ்யராய் இருந்த மதுரகவிகள் என்பவர், நம்மாழ்வாரையும் அவருடைய நூல்களையும் சிறப்பித்துக் ழுகண்ணிநுண் சிறுத்தாம்புழு என்னும் பத்துப் பாசுரங்கள் அடங்கிய ஒரு நூலை அருளிச்செய்தார். அவர், ழுநம்மாழ்வாருடைய பாசுரங்களைப் பாடுதல் எனக்குப் பேரின்பமாய் உள்ளது; அவரே எனக்குத் தெய்வம்; அவரையன்றி வேறு தெய்வம் அறியேன்; அவர் பாசுரங்களை இசையோடு பாடுதலே எனக்கு இன்பமான பொழுது போக்காகும்,ழு என்று பலவாறாகப் போற்றியுள்ளார். அவர் மதுரகவி என்றும் மதுரகவிகள் என்றும், மதுரகவியாழ்வார் என்றும் பெயர் கூறப்பட்டு, ஆழ்வார்களோடு சேர்த்து எண்ணப்பட்டுள்ளார். அவர் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் நூல், ஏனைய ஆழ்வார்களுடைய நூல்களோடு நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றால், நம்மாழ்வாரை எவ்வளவு பெருமையாக மதித்துள்ளனர் என்பது புலனாகும்.

    கவிச்சக்கரவர்த்தியாராகிய கம்பர் நம்மாழ்வாரைப் பற்றிச் சடகோபரந்தாதிஎன்ற ஓர் அரிய நூலை இயற்றியுள்ளார். அந்நூல் நூறு பாக்களையுடையது. அந்நூலில் நம்மாழ்வாரைப் புகழ்ந்திருப்பதைவிட அவருடைய திருவாய்மொழியை மிகச் சிறப்பாகப் புகழ்ந்துள்ளார். திருமாலினுடைய சிறப்புகள் எல்லாவற்றினும் நம்மாழ்வாருடைய திருவாய்மொழி அவருக்குக் கிடைத்தது மிகப் பெரிய சிறப்பு என்கிறார்; திருவாய்மொழியை ழுஆராவமுதக் கவியாயிரம்ழு என்கிறார்; திருவாய்மொழியின் முன் பிற கவிகள் பொருள் அற்ற கவிகளே என்கிறார்.

    திருவாய்மொழி நூற்றந்தாதிஎன்ற ஒரு நூல் உளது. அது, திருவாய்மொழியில் ஒவ்வொரு பதிகத்தின் கருத்தையும் தொகுத்து ஒவ்வொரு வெண்பாவில் அடக்கிக் கூறுகின்றது.