|
த
திருக்குருகூரில் நம்மாழ்வார் பரம்பரையில் தோன்றி, கல்வியிலும் கவி பாடுவதிலும் சிறந்து
விளங்கிய புலவர் சிலர், நம்மாழ்வார் சிறப்புகளையும் அவர் நூல்களின் சிறப்புகளையும் அமைத்துப்பல
நூல்களை இயற்றியுள்ளனர். மாறன் அலங்காரம், மாறன் பாப்பாவினம், மாறன் திருப்பதிக்கோவை,
மாறன் அகப்பொருள் முதலிய பல நூல்கள் அவ்வாறு இயற்றப்பட்டுள்ளன. திருவேங்கடத்துறைவான்
கவிராயர் இயற்றிய மாறன் கோவை என்ற ஓர் அரிய நூலும் உளது.
திராவிடவேதோபநிஷத் சங்கதி, திராவிடவேதோபநிஷத் தாத்பர்ய ரத்நாவலி
என்ற இரண்டு வடமொழி நூல்கள் திருவாய் மொழியின் சிறப்பைக் கூறத் தோன்றியுள்ளன. தமிழ்
நூலைப் பாராட்டி வடமொழி நூல்கள் தோன்றின எனின், அத்தகைய பாராட்டிற்குரியது திருவாய்மொழி
ஒன்றேயாகும். திருவாய் மொழியை ஆயிரம் தெலுங்குச் செய்யுளாகவும், ஆயிரம் வடமொழிச் செய்யுளாகவும்
பாடியிருக்கிறார்கள். அதற்கு ‘ஆந்திர கீர்வாண சகஷ்ரம்’ என்பது பெயர். இவ்வாறு கன்னடத்திலுஞ்
செய்யப்பட்டுள்ளது.
தமிழிலும் வடமொழியிலுமாக இவ்வாறு பல நூல்கள் திருவாய் மொழியைப்
புகழ்ந்து கூறுகின்றன என்றால், திருவாய்மொழியின் செய்யுள் நயமும், இலக்கியச் சுவையும், சமயக்
கருத்துக்களும், பிறவுமே அதற்குக் காரணம் என்பதில் ஐயம் இல்லை.
திருவாய்மொழி எல்லாவற்றானுஞ் சிறந்த ஒரு நூலாய் இருப்பதனால், சிறந்த
தமிழ் நூல்களின் உரையாசிரியர்கள், இதிலிருந்து இலக்கியக் கருத்துகளுக்கும், சமயக் கருத்துகளுக்கும்,
இலக்கணக் குறிப்புகளுக்கும் பல மேற்கோள்கள் எடுத்துக்காட்டி உள்ளார்கள்.
திருக்குறளுக்குச் சிறந்த உரை எழுதிய பரிமேலழகர், ‘பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்
மற்று, நிலையாமை காணப்படும்,’ என்ற குறளின் உரையில் ‘அற்றது பற்றெனில், உற்றது வீடு,’ என்ற
பாசுரப் பகுதியையும், ‘ஆரா வியற்கை அவாநீப்பின் அந்நிலையே, பேரா வியற்கை தரும்,’ என்ற
குறளின் உரையில், ‘நன்றாய் ஞானங் கடந்து போய் நல்லிந்திரியம் எல்லாம் ஈர்த்து, ஒன்றாய்க்
கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங் கின் பத்துன்பங்கள் செற்றுக்
களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடு மதுவே வீடு வீடாமே,’1 என்ற பாசுரத்தையும்,
அரசனுக்கு
____________________________________________________
1.
‘வீடு அதுவே வீடு வீடாமே,’ என்றும் பாடம் உண்டு.
|