|
ப
பாசுரப் பகுதியாகிய
‘பைத்த பாம்பணையான்’ என்பதனையும், முப்பத்தாறாவது பாட்டினுரையில் ‘பற்பநாபன் உயர்வற
உயரும் பெருந்திறலோன் என்பான்,’ என்ற பகுதியையும், முப்பத்தொன்பதாம் பாட்டின் உரையில்
‘கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர், பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்’
என்ற பகுதியையும், நாற்பத்தேழாம் பாட்டின் உரையில் ‘வைகல் பூங்கழிவாய் வந்து மேயுங் குருகினங்காள்,
கைகள் கூப்பிச் சொல்லீர்’ என்ற பகுதியையும்; நாற்பத்தொன்பதாம் பாட்டின் உரையில்
‘பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக்கொண்டு பகலிழந்த, மேல்பால் திசைப்பெண் புலம்புறு
மாலை’, ‘வேனிலஞ் செல்வன் சுவைத்து உமிழ்பாலை’ என்ற பகுதிகளையும் மேற்கோளாகக் காட்டி உள்ளனர்.
வேறு சில சொற்றொடர்களும், ‘காரி மாறன்’ என்ற ஆழ்வார் பெயரும் காட்டப்பட்டுள்ளன.
இலக்கணக் கொத்து ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகர் ‘கருநாய் கவர்ந்த
காலர் சிதைகிய பானையர்’ என்ற பகுதியை மேற்கோளாகக் காட்டினர்.
திருவாய்மொழி பல வகைகளிலும் சிறப்புற்று விளங்குவதனால் உரையாசிரியர்
பலரும், பிற்கால நூலாசிரியர்களும் இதிலிருந்து இவ்வாறு மேற்கோள் காட்டுவார் ஆயினர்.
சில அகச்சான்றுகள்
நம்மாழ்வாரைப்பற்றிய சில குறிப்புகள் அவர்தம் நூல்களிலிருந்து கிடைக்கின்றன. நம்மாழ்வாருடைய
பெற்றோராகிய காரியாரும் உடைய நங்கையாரும் சில காலம் பிள்ளைப்பேறு இல்லாதிருந்து திருக்குறுங்குடி
நம்பியை வேண்டி நம்மாழ்வாரைப் பெற்றெடுத்தனர் என்பது வரலாறு. திருவிருத்தத்தில்,
‘கொடுங்காற் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடுங் கௌவைத்து அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம்
பரவிப்பெற்ற
தொடுங்கா லொசியும் இடைஇள மான்சென்ற சூழ்கடமே.’
என்பது 37-ஆம்
பாசுரமாகும். இது, தலைவி தலைவனுடன் செல்லுதலாகிய ‘உடன்போக்கு’ என்னும் பகுதியில், தாய்,
தலைவியின் மென்மைத் தன்மையும், அவள் தலைவனுடன் சென்ற சுரத்தின் கொடுமையும் நினைந்து இரங்கலாகிய
துறைப்பொருளுடையது. இது, நம்மாழ்வார் ஒரு தலைவியின் மனநிலையைத் தாம் அடைந்து,
|