|
New Page 1
‘வாரா வருவாய் வருமென் மாயா மூர்த்தியாய்
ஆரா வமுதாய் அடியேன் ஆலி யகமே தித்திப்பாய்’
(5. 8, 10.)
‘வண்ணம் மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர்
அதிபதியே!’
(6. 10. 3. )
என்பனவற்றால் ஆழ்வார்க்கு
உண்டான இன்பம் மிகச்சிறந்தது; உயிரை ஒட்டியது என்பதை அறியலாம். இவ்வாறு இன்னும் பல இடங்களிற்கூறியுள்ளார்
ஆழ்வார்.
அவ்வாறு ஆழ்வார் உள்ளத்தில் எம்பெருமானை நினைப்பதனால் அப்பொழுதைக்கு
அப்பொழுது புதிய புதிய ஆராவமுதம் உண்டாற் போன்ற இன்பம் பெருகி வளரவே, அவ்வின்ப உணர்ச்சி
உள்ளடங்காத நிலையில் இறைவனைப்பற்றிப் பாடத்தொடங்கினர். சிறந்த கவிபாடும் ஆற்றல் உள்ள
ஒருவன், ஒரு நல்ல நிகழ்ச்சியைக் கண்டால், அந்நிகழ்ச்சியை அமைத்துக் கவி பாடாதிருத்தல்
அவனுக்கு இயலாத ஒன்றாகும். கோவல கண்ணகியர் வரலாற்றைக் கேட்ட சிறந்த புலமையும் கவி பாடும்
ஆற்றலுமுடைய இளங்கோவடிகள்,. உடனே அவ்வரலாற்றை அமைத்துக் கவி பாடுவாராயினர். அவ்வரலாற்றைக்
கேட்டும் கவி பாடாதிருத்தல், இளங்கோவடிகளால் இயலாத காரியம் எனக் கொள்க. அவ்வாறே, எம்பெருமானை
நினைத்து நினைத்து இன்பவுணர்ச்சி பெருகப்பெற்ற ஆழ்வார், அப்பெருமானைப்பற்றிக் கவி பாடாது
இருக்க இயலாத நிலையையுடையவராய்ப் பாடத் தொடங்கினார்.
‘கண்டுகொண்டு என்கண்ணிணை யாரக் களித்துப்
பண்டை வினையாயின பற்றோ டறுத்துத்
தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள்
சொன்னேன்
அண்டத் தமரர் பெருமா னடியேனே.’
(9. 4. 9.)
திருவாய்மொழி முழுவதும்
ஆராய்ந்த நம்முன்னோர், இறைவனைக் கண்டதாக மகிழ்ந்து கூறும் இடமெல்லாம் அவர் ஞானக்கண்ணாற்
கண்டதேயாகும் என்றும், அவர் அனுபவம் எல்லாம் மானசானுபவமே என்றும் முடிவு செய்துள்ளனர். ஆதலால்,
இங்குக் ‘கண்டு கொண்டு என் கண்ணிணை ஆரக்களித்து’ என்று தம் ஞானக் கண்ணாற்கண்டு களித்ததையே
கூறுகின்றார் எனக் கொள்க.
ஆழ்வார் எம்பெருமானை ஞானக்கண்ணாற்கண்டு களித்தார்; அக்களிப்பினால்
சொன்மாலைகள் சொல்லல் ஆயினார். ‘சொன் மாலைகள் சொன்னேன்’ என்றதனால், திருவாய்மொழி
முழுவதும் ஒரே மாலை என்று கொள்ளுதல் ஆகாது. ஒவ்வொரு பாசுரமும் இறைவனுக்கு அணிந்த ஒவ்வொரு
மாலை எனக் கொள்ளுதலே பொருத்தமாகும். ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு மலர்; ஒவ்வொரு
|