திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
முதல் தொகுதி
3

The Tamil rendering of this passage is as follows

முகவுரை

   மனையும் பெருஞ்செல் வமுமக்க ளுமற்றை வாழ்வுந்தன்னை
    நினையும் பதமென நின்றபி ரான்குரு கூர்நிமலன்
    புனையுந் தமிழ்க்கவி யால்இருள் நீங்கிப் பொருள்விளங்கி
    வினையுந் திரிவுற் றனகுற்ற நீங்கின வேதங்களே.


   
செந்தமிழ்நாடு, கன்று எறிந்த தோளான்றன் கனைகழலே காண்பதற்கு நன்கு அறிந்த நாவலஞ்சூழ் நாடாதலின், இந்நாட்டினைச் 'சித்திக்குஒரு விதையாகிய தென்னாடு' என்பர். கன்று எறிந்த தோளான் கனைகழலைக் காண்பதற்குக் கருவிகளாக இருப்பன். ஆழ்வார்கள் அருளிச்செய்த திருவாய்மொழி முதலிய திவ்வியப் பிரபந்தங்களும், அவைபோன்ற பிற நூல்களும் ஆகும். அவற்றுள், திருவாய்மொழியினைத் 'தமிழ்மறை' என்பர் சான்றோர். திருவாய்மொழியின் சிறப்பு ஒப்புயர்வற்றது. திருவாய்மொழி தோன்றியதனானே தமிழ்மொழி ஈடும் எடுப்பும் இல்லாத சிறப்பினையடைந்தது1 என்று கூறின், அது மிகையாகாது. 'தமிழ் நூல்களில் தோன்றுகிற ஐயந்திரிபுகளை வடமொழி நூல்களைக்கொண்டு தெளிக,'2 என்று கூறினார் திருவாவடுதுறையாதீனத்துச் சுவாமிநாத தேசிகர்.
_____________________________________________________

1. 'மொழிபல வாயின செப்பம் பிறந்தது முத்தியெய்தும்
   வழிபல வாயவிட்டு ஒன்றா யதுவ' வாநரகக்
   குழிபல வாயின பாழ்பட் டனகுளிர் நீர்ப்பொருநை
   சுழிபல வாய்ஒ' குங்குரு கூரெந்தை தோன்றலினே.'

  என்றார் கம்பநாடர் (சடகோபரந்தாதி, 5).

2. 'பல்காற் பழகினுந் தெரியா உளவேற்
   றொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவை
   மூன்றினு முழங்கும்; ஆண்டினு மிலையேல்
   வடநூல் வெளிபெற வழங்கும் என்ப.'

  என்பது இலக்கணக்கொத்து, பா. சூ. 7.