திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
4

New Page 1

'வடமொழி வேத வேதாந்தங்களில் தோன்றுகிற ஐயந் திரிபுகளைத் திருவாய்மொழியினைக் கொண்டு தெளிகின்றோம்." என்று அருளிச்செய்தனர் வேதாந்த தேசிகர் முதலிய பெரியோர். இதனால், தமிழிற்கு மிகுந்த சிறப்பு ஏற்பட்டது தெளிவாகும்.

    திருவாய்மொழி இறைவனால் மயர்வற மதிநலமருளப்பெற்ற ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்டதாதலின், இதன் உட்பொருள்களை அறிந்து கூறல் எத்தகைய புலமை நிரம்பினோர்க்கும் இயல்வது அன்று; கருவிலே திருவுடைய பெரியோர்கட்கே இயல்வதாகும். இதன் உரை மணிப்பிரவாள நடையில்2 அமைந்ததாகும். இதற்கு உரை வகுத்த பெரியோர்கள், தென்சொற்கடந்து வடசொற்கடற்கு எல்லை தேர்ந்தவர்கள்; இறைவனுடைய திருவருளுக்குப் பூரண பாத்திரமானவர்கள்; ஞானம் அநுட்டானமிவை நன்றாகவே யுடை

____________________________________________________

1. ‘பொய்கைமுனி பூதத்தார் பேயாழ் வார் தண்
       பொருநல்வருங் குருகேசன் விட்டு சித்தன்
   துய்யகுல சேகரன்நம் பாண நாதன்
       தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோதி
   வய்யமெலா மறைவிளங்க வாள்வேல் ஏந்தும்
       மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
   செய்யதமிழ் மாலைகள்நாந் தெளிய வோதித்
       தெளியாத மறைநிலங்கள் தெளிகின் றோமே.’

  என்பது ஸ்ரீ தேசிகப் பிரபந்தம், அதிகார சங். 1.

      ‘பாஷியகாரர் இதுகொண்டு சூத்திர வாக்கியங்களை ஒருங்கவிடுவர்,’
  என்பது ஆசார்யஹ்ருதயம்.

  ‘உயிர்த்தா ரைபிற்புக் குறுகுறும் பாமொரு மூன்றனையுஞ்
   செயிர்த்தார் குருகைவந் தார்திரு வாய்மொழி செப்பலுற்றால்
   மயிர்த்தா ரைகள்பொடிக் குங்கண்கள் நீர்மல்கு மாமறையுள்
   அயிர்த்தார் அயிர்த்த பொருள்வெளி யாமெங்கள் அந்தணர்க்கே.’

  என்றார் கம்பநாடர் (சடகோப. 33).

2. மணிப்பிரவாளமாவது, இருமொழிச் சொற்கள் விரவி, கற்போர்க்கு இன்பம்
  பயக்குமாறு அமைந்ததொரு நடை. ஈண்டு இரு மொழியாவன, வடமொழியும்
  தென்மொழியுமாம். முத்தும் பவழமுங் கோத்தாற்போன்று வடமொழி
  தென்மொழிச்சொற்கள் விரவிய நடையை மணிப்பிரவாளம் என்பர். 

  ‘இடையே வடவெழுத் தெய்தில் வரவியல் ஈண்டெதுகை

   நடையேது மில்லா மணிப்பிர வாளநற் றெய்வச்சொல்லின்
   இடையே முடியும் பதமுடைத்தாம்’

  என்பது வீரசோழியம். அலங்காரப். 2.