|
New Page 1
வைணவ சமயத்தின் கொள்கையாகிய தத்துவம் மூன்றும் அவற்றின் இயல்புகளும் ஆழ்வார் பல இடங்களில்
சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார்.
“யாவையும்
யவருந் தானாய் அவரவர் சமயந் தோறும்
தோய்விலன் புலனைந் துக்கும் சொலப்படான் உணர்வின் முர்த்தி
ஆவிசேர் உயிரி னுள்ளால் ஆதுமோர் பற்றி லாத
பாவனை அதனைக் கூடில் அவனையுங் கூட லாமே.”
(3. 4: 10.)
என்ற பாசுரத்தில் அழகாக
வெளியிட்டுள்ளார்.
யாவையும் யவரும் தானாய் - உயிரில்பொருள்கள் உயிர்கள் ஆகிய எல்லாவற்றுள்ளும்
தான் அந்தரியாமியாய் நின்று, அவரவர் சமயந்தோறும் தோய்விலன் - அவ்வப்பொருள்களின்
விகாரங்களைத் தான் அடையான். சமயம் - அவஸ்தை, விகாரம் பரசுரத்தில் அவரவர் சமயந்தோறும்
என்றிருந்தாலும், அவையவை சமயந்தோறும் என்பதையும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். உயிர்களின்
விகாரங்களாவன, அவ்வவ்வுயிர் கொண்டுள்ள உடம்பிற்கேற்ப உண்டாகும் இன்பதுன்பங்கள். உயிரில்
பொருள்கட்குரிய விகாரங்களாவன, வளர்தல் பருத்தல் முதலியவை. இருவகைப் பொருள்கட்குள்ளும் அந்தரியாமியாய்
நிற்கும் இறைவன் அவற்றின் விகாரங்களை அடைவதில்லை என்பது கருத்து. இதனை ஓர் உதாரணத்தால்
விளக்குகின்றார் மேல்; ஆவி சேர் உயிரினுள்ளால் ஆது மோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில்
அவனையுங் கூடலாமே - உடம்பினுள் இருக்கின்ற உயிர் அவ்வுடம்பின் விகாரங்களை அடைவதில்லை என்பதை
நன்கு தெளிவோமாயின், அவ்வுடம்பு, உயிர் இரண்டனுள்ளும் இருக்கின்ற இறைவன் அவ்விரண்டன்
விகாரங்களையும் அடைவதில்லை என்பதையும் நன்கு தெளியலாம் என்பது கருத்து. ஆவி - உடம்பு; ஆகுபெயராகக்
கொள்க. ‘யாதும்’ என்பது ‘ஆதும்’ எனத் திரிந்தது. அவனை - இறைவனை. எம்பெருமான் எல்லாப்பொருள்களுள்ளும்
அந்தரியாமியாய் நிற்கின்றான் என்னும் கருத்தைப் பல இடங்களில் ஆழ்வார் வெளியிட்டுள்ளனர்.
(2) ‘வீடு பேறு என்பது யாது?’ என்பது பற்றிச் சமயநூல்கள் வேறு வகையாகக்
கூறும். வீடு என்பது ஒரு தனி உலகம் என வைணவ சமயம் கூறுகின்றது. இதுவும் தமிழ் நாட்டின் பழங்கொள்கையேயாகும்.
திருக்குறளில்,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
|