திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
38

எல

எல்லாப்பொருள்களையும் தனக்குள் அடக்கி எங்கும் வியாபித்துள்ள நிலையை உணர்த்தும். அழிவில்லாப் பொருள்களை இடமாக உடையவன் என்பது, இறைவன் எல்லாப் பொருள்கட்கும் அந்தரியாமியாய் உள்ள நிலையை உணர்த்தும். இவ்வாறு நம் முன்னோர் பொருள் கொண்டனர். இவ்வாறு நம் முன்னோர் பொருள் கொண்டதற்கு ஆதாரமாக உள்ளது, ஆழ்வார் பாசுரம் எனலாம்.

        ‘அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
        நெறியினால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்’

9. 6: 4.

என்ற பாசுரத்தில், தன்னுள் அனைத்துலகும் நிற்க’ என்றது, அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்துக்கு இடமாய் உள்ளவன் என்ற கருத்தைக் குறிப்பிடுவதாகவும், ‘நெறியினால் தானும் அவற்றுள் நிற்கும்பிரான்’ என்பது, அப்பொருள்கட்குள்ளே அந்தரியாமியாய் உள்ளவன் என்ற கருத்தைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். எனவே, ஆழ்வாருடைய கருத்தை ஒட்டியே நம் முன்னோர் நாராயணன் என்ற தொடருக்குப் பொருள் கூறினர் எனக் கொள்க.

    சங்க இலக்கியங்களுள் ஒன்றாகிய நற்றிணையின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இக்கருத்துகளை அழகாக விளக்குகின்றது.

        ‘மாநிலம் சேவடி யாகத் தூநீர்
        வளைநரல் பௌவம் உடுக்கை யாக
        விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
        பசங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
        இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
        வேத முதல்வன் என்ப
        தீதற விளங்கிய திகிரி யோனே.’


என்பது அச்செய்யுள். இதன்கண், ‘இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய வேதமுதல்வன் என்ப’ என்பதே இங்கு வேண்டுவது. இயன்ற - உலகத்தில் தோன்றியுள்ள, எல்லாம் பயின்று - எல்லாப் பொருள்களினுள்ளும் (உயிர் உயிரல் பொருளாகிய எல்லாப்பொருள்களினுள்ளும்) அந்தரியாமியாய் நின்று, அகத்தடக்கிய - அவ்வெல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ள (வியாபகமாகவுள்ள), வேதமுதல்வன் என்ப - வேதத்தாலுணர்த்தப்படும் முதற் பொருள் என்று மெய்யுணர்ந்தோர் கூறுவர் என்பது அப்பகுதியின் கருத்தாகும்.  (விரிவு கருதிச் செய்யுள் முழுவதுக்கும் பொருள்