|
எ
எழுதப்படவில்லை.)
எனவே, நாராயணன் என்பதற்கு ஆழ்வார் கருத்தும், அதனை ஒட்டி நம் முன்னோர் கொண்ட கருத்தும்
தமிழ் நாட்டில் வழங்கிய கருத்தேயாகும் எனக் கொள்க.
எட்டெழுத்து மந்திரத்தில் நாராயணன் என்பது நீங்கலாக எஞ்சிய பகுதிகட்குக்
கூறப்பட்ட பொருள்களும் ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்கே காணப்படுவனவேயாகும்.
இறைவன் திருப்பெயர்களில் கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன்,
விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், இருடிகேசன், பதுமநாபன், தாமோதரன் என்னும்
பன்னிரண்டு திருப்பெயர்களை ஒன்று சேர்த்து மந்திரமாக வழங்கி வருகின்றனர். அவற்றை ஆழ்வார்
‘கேசவன் தமர்’ என்று தொடங்கும் திருவாய்மொழியில் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொரு திருப்பெயராக
அமைத்துப் பன்னிரண்டு பாசுரங்களில் வெளியிட்டுள்ளனர். அப்பாசுரங்கட்குப் ‘பன்னிரு நாமப் பாட்டு’
என்று அவரே பெயர் கூறியுள்ளனர். இவ்வாறு வைணவ சமயக் கருத்துகள் இன்னும் பல ஆழ்வார்
பாசுரங்களில் ஆங்காங்கு அமைந்துள்ளன.
ஆழ்வார் இறைவனிடத்து வேண்டுவன
ஆழ்வார்
இறைவனிடத்துக் கொண்ட அளவிறந்த அன்பினால் அவனையன்றி வேறொருவரையும் நினைக்க முடியாத நிலையில்,
அவனை மறக்க முடியாத நிலையில், அவனை நினைக்க நினைக்க உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சி மிகுதியால்
கவி பாடுவாராயினர். அவ்வாறு இறைவனிடத்து அன்பு கொண்ட ஆழ்வார், அவனிடத்து என்ன பயனை
விரும்பினார் என்பது ஆராய்ந்து அறியத்தக்கது.
பொதுவாக, எல்லாரும் கடவுளை எண்ணுவதும் துதிப்பதும் வணங்குவதும் தங்கட்குத்துன்பம்
நீங்கவும் இன்பம் உண்டாகவுமேயாம். அப்பயன்கள் உண்டாகிவிட்டால், பலருக்குக் கடவுள் நினைப்புக்
குறையும்; அன்றி, மறந்தும் போகும். துன்பம் நீங்கவில்லையாயினும் இன்பம் உண்டாகவில்லையாயினும்
அவ்வாறே கடவுள் நினைப்பைக் கைவிடுவர். பயன் கருதிக் கடவுளை நினைப்பதால் வரும் தீமை
இவையேயாகும்.
ஆழ்வார் நிலை அஃது அன்று. ஆழ்வார் பயன் கருதித் திருமாலிடத்து அன்பு
கொண்டிலர்; இயல்பாகவே அன்பு கொண்டனர். பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிப் பரமபதம்
அடைதல் ஆழ்வார் விரும்பும் பயனே எனினும், அது முக்கியப்பயனன்று. இறைவ
|