|
ன
னிடத்து நீங்கா அன்பும்,
அவனை வணங்குவதும், அவன் புகழ்களைப் பாடி மகிழ்வதுமே ஆழ்வார் விரும்பும் பயன்களாம். இக்கருத்துகள்
ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்குக் காணப்படுகின்றன.
‘யான் மோக்ஷம் அடைந்தாலும், அதனில் தாழ்ந்த சுவர்க்கம் அடைந்தாலும்,
அல்லது நரகமே அடைந்தாலும் அஃது ஒன்றையும் யான் எண்ணவில்லை. அஃது எவ்வாறாயினும் ஆகுக. எம்பெருமானை
இடைவிடாது நினைந்து மகிழும் இன்பமே யான் வேண்டுகின்றேன். அவ்வின்பத்தை யான் எங்கிருந்து
அடைந்தாலும் அடைக. இடத்தின் உயர்வு தாழ்வுகளை யான் கருதவில்லை; என்கிறார்.
‘சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பலபிற விப்பெரு மானை
மறப்பொன் றின்றிஎன் றும்மகிழ் வேனே.’
(2. 9: 5.)
என்ற பாசுரம் மேற்கூறிய
கருத்தைக் காட்டுகின்றது.
இறைவனை நினைப்பது மட்டும் அன்றி, அவனுக்கு வேண்டிய தொண்டுகளையும் செய்யவிரும்புகின்றார்
ஆழ்வார். இன்னதொண்டு தான் செய்வது என்ற நியதியின்றி, இறைவனுக்குரிய எல்லாத் தொண்டுகளையும்
செய்தல் வேண்டும்; அத்தொண்டுகளை ஒரு காலம் செய்து, பின் விடுவது என்றில்லாமல், எப்போதும்
செய்தல் வேண்டும் என்று விரும்புகின்றார். ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்று தொடங்குகின்ற திருவாய்மொழி
இக்கருத்தையே விரிவாகக் கூறுகின்றது. ‘அங்ஙனம் எல்லாத் தொண்டுகளையும் செய்யுமிடத்தும் அவற்றை
என் விருப்பத்திற்காகச் செய்தல் ஆகாது; அவன் விருப்பத்திற்காகவே செய்தல் வேண்டும்; யான்
செய்யும் தொண்டைக் கண்டு எம்பெருமான் மகிழ்ச்சியடைந்தால், அம்மகிழ்ச்சியைக் காண்பதே
எனக்குப் பேரின்பமாகும்,’ என்று கூறுகின்றார்.
‘எனக்கே யாட்செய்எக் காலத்தும் என்றுஎன்
மனக்கே வந்திடை வீடின்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளு மீதே
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.’
(2. 9: 8.)
என்ற பாசுரம் மேற்கூறிய
கருத்தைக் காட்டுகின்றது.
சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய குறுந்தொகையில் ‘முளி தயிர் பிசைந்த
காந்தள் மெல்விரல்’ என்று தொடங்கும் செய்யுள், இக்கருத்தோடு ஒத்துளது. ஒரு தலைவி, தன் காதலனுக்காக
மிக
|