திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
முதல் தொகுதி
44

The Tamil rendering of this passage is as follows

திருவாய்மொழியின் வியாக்கியான வரலாறு

   பிள்ளான்நஞ் சீயர் பெரியவாச் சான்பிள்ளை
    தெள்ளார் வடக்குத் திருவீதிப் - பிள்ளை
    மணவாள யோகிதிரு வாய்மொழியைக் காத்த
    குணவாளர் என்றுநெஞ்சே! கூறு.


    திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்துநாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்னும் ஐந்து வியாக்கியானங்களும், அவற்றுள் முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானத்துக்குச் சீயர் அரும்பதம், அடைய வளைந்தான் அரும்பதம் என்னும் இரண்டு குறிப்புரைகளும் உள்ளன.

    திருவாய்மொழிக்கு முதல் உரையாசிரியர், ஸ்ரீ ஆளவந்தாரே ஆவர். இதனை ஈடு வியாக்கியானத்தில் 'இத்திருவாய்மொழி தன்னை ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வஹித்துக்கொண்டு போந்து, எம்பெருமானாரும் அப்படியே அருளிச்செய்துகொண்டு போந்து, பாஷ்யம் தலைக்கட்டின பின்பு பக்திவிஷயமாக அருளிச்செய்துகொண்டு போருவர்' (வீடுமின் முற்றவும் - முன்னுரை) என்றும், தேனும் பாலும் இத்யாதி - இதற்கு ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலையாண்டான் பணிக்கும்படி, ஏகஜாதீய திரவியங்கள் தன்னிலே கலந்தாற்போலே' என்று; அதாவது, தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற்போலவும், நெய்யும் நெய்யும் கலந்தாற்போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற்போலவும், அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்று அங்ஙனம் அன்றியே, எம்பெருமானார் அருளிச்செய்யும்படி : இவற்றை - ரஸவத்பதார்த்தங்களுக்கெல்லாம் உபலக்ஷணமாக்கி, 'தானும் நானுமான கல்விக்குள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி ஸம்ஷ்லேஷித்தோம் என்கிறார் என்று.' (2. 3: 1.) என்றும், ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிக்கும்படி: ழுஅறிவுநடையாடாத தசையிலே சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்து, பிறந்த ஞானத்தை அழிக்கக் கடவதான