New Page 1
தேக சம்பந்தத்தோடே
பின்னையும் வைத்தாய் என்கிற இழவாலே சொல்லுகிறார்,’ என்றாம். இத்தை எம்பெருமானார் கேட்டருளி,
“முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீ தியோடே நடவா நிற்க, நடுவே அப்ரீதி தோற்றச்
சொல்லுமது சேராது; ஆன பின்பு, இங்ஙனே யாம் இத்தனை. ‘அறியா மாமாயத்து அடியேனை - அறியாக்
காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து - வைத்தாயால் என்கிறார்’ என்று இத்தையும் ஓர்
உபகாரமாக்கி அருளிச் செய்தார்” (2. 3: 3.) என்றும் இன்னோரன்ன பல இடங்களில் வருதல்கொண்டு
தெளிதல் தகும்.
இனி, திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களையும் அவற்றின் அர்த்த
விசேடங்கலையும் ஆழ்வாரிடம் நேரில் பெற்று அவற்றை உலகில் பரவச் செய்தவர் ஸ்ரீமந் நாதமுனிகள்
ஆதலின், அப்பெரியாரையே முதல் உரையாசிரியராகக் கூறினும் இழுக்காது, 1அவர் முதலாக
வந்த அவ்வுரை எம்பெருமானார் காலம் வரையிலும் கேள்வி வாயிலாகவே வழங்கி வந்தது; நூல் வடிவில்
வெளிவரவில்லை. எம்பெருமானார் காலத்திலேதான் வியாக்கியானம் என்ற பெயரால் நூல் வடிவில்
வெளி வந்தது.
உரை வந்த வரலாறு
உறு பெருஞ்செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறிதருபூமகள் நாதனும் மாறன் விளங்கிய
சீர் நெறிதரு செந்தமிழ் ஆரணமே என்று இந்நீள் நிலத்தோர் அறிதர நின்றவரும், தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற்றுடையவருமான எம்பெருமானாருடையகாலத்தில்,
ஆசாரியர்கள் அனைவரும் ஒன்று கூடி, எம்பெருமானாருக்கு மானச புத்திரரான திருக்குருகைப் பிரான்
பிள்ளையை அடைந்து, ‘ஆழ்வார்களின் அருளிச்செயலின் அரும்பொருளை அனைவரும் அறியலாம்படி
1
ஸ்ரீமந் நாதமுனிகள்
|
உய்யக்கொண்டார்
|
மணக்கால் நம்பி
|
ஸ்ரீ ஆளவந்தார் (ஸ்ரீமந் நாதமுனிகள் பௌத்திரர்)
|
பெரிய நம்பிகள்
அல்லது
திருமாலையாண்டான்
|
இராமாநுசர்
|