| 
த
 
தலை குனியச் செய்தனர். 
பின்னர், மகாவிரக்தராத் துறவறத்தை மேற்கொண்டு மற்றைச் சமயங்களை எல்லாம் வென்று,
‘வாதி சேசரி’
என்ற சிறப்புப் 
பெயரையும் பெற்றனர். 
 
    பின்னர், முன்புள்ள பெரியோர்கள் அருளிச்செய்த வியாக்கியானங்களை எல்லாம் 
கண்டு, அவற்றின் சார தமமான அர்த்த விசேடங்களை எல்லாம் சுருக்கி, எல்லார்க்கும் எளிதாகவும் 
விளக்கமாகவும் இருக்குமாறு, இப்பன்னீராயிரப்படி என்னும் வியாக்கியானத்தை அருளிச்செய்தனர். 
இவர் செய்த வேறு நூல்கள், ‘தீபப் பிரகாசிகை, தீபசங்கிரகம், தத்துவ நிரூபணம், தத்துவதீபம், 
தத்துவ பூஷணம், தத்துவதீபசங்கிரகம், கீதாசாரம், தமிழ்க்கவி பிரபந்தம், இரகசியவிவரணமாலை, 
இருபத்துநாலாயிரப்படி பிரமாணத்திரட்டு, சுலோக ரூபத்தால் திருவாய்மொழி சங்கதி என்பன. 
 
    
இருபத்துநாலாயிரப்படி 
:
இதனை 
அருளிச்செய்தவர், 1பெரிய வாச்சான்பிள்ளை. ஸ்ரீராமாயணம் இருபத்து நாலாயிரம் 
சுலோகங்களையுடையது. ஆதலின், அத்தொகையளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது. 
 
    நம்பிள்ளை, கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப்பிள்ளை 
பட்டருக்குத் திருவாய்மொழியின் வியாக்கியானத்தை ஒரு முறை தனியே அருளிச்செய்துகொண்டு வந்தார். 
நம்பிள்ளை அருளிச்செய்யும் பொருள்களை ஒன்றும் தப்பாமல் பதறாமல் கேட்டு வந்த பட்டரும் பகலில் 
கேட்ட அப்பொருள்களை எல்லாம் நாடோறும் இரவில் எழுதி வரலாயினர். இவ்வாறே பகலில் கேட்டலும் 
இரவில் எழுதுதலும் செய்துகொண்டு வர, பின்னர், நூலும் முடிந்தது; இவர் எழுதுதலும் முடிவுற்றது. முடிந்த 
பின், பட்டர், தாம் எழுதின வியாக்கியானத்தை நம்பிள்ளை திருமுன்னர்க் கொண்டு சென்று வைக்க, 
பிள்ளை, ‘இது என்?’ என்று கேட்க, பட்டர், ‘தேவரீர் ஒருமுறை திருவாய்மொழிக்கு நிர்வஹித்த 
கட்டளை’ என்ன, நம்பிள்ளையும் ‘ஆமோ!’ என்று ஏட்டினை அவிழ்த்துப்பார்த்த அளவில் மகாபாரதத்தின் 
தொகையளவில் இலட்சத்து இருபத்தையாயிரம் கிரந்தங்களாய் இருக்கக் கண்டு, பெருக்க வியாகுலப்பட்டுப் 
பட்டரைப் பார்த்து, ‘நம்முடைய அநுமதி இன்றி நாட்டுக்குப் 
1. 
‘நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிடப் 
  பின்பெரிய வாச்சான்பிள் ளையதனால் - இன்பா 
  வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது 
  இருபத்து நாலா யிரம்.’ 
 
  என்பது உபதேச ரத்தினமாலை, 43. 
 |