ப
பாட்டு உரையாம்படி நீர்
நினைத்தவாறு திருவாய்மொழியினை வெளியிடுவான் என்?’ என்ன, பட்டரும், ‘தேவரீர் அருளிச்செய்த
திவ்விய சூக்திகளை எழுதினேன். அஃதொழிய கால் கொம்பு சுழி ஏறினது உண்டாகில் பார்த்தருளால்
வேண்டும்,’ என்றார்.
அதனைக்கேட்ட நம்பிள்ளை, பட்டரைப் பார்த்து, ‘வாரீர் பட்டரே! திருவாய்மொழி
நிமித்தமாக நாம் வாக்கால் சொன்னதை எழுதினீராகில், நம் மனத்திலே தங்கி இருக்கும் விசேடார்த்தங்களை
எல்லாம் எழுதப்பெற்றீரோ?’1 என்று முனிந்து அருளிச்செய்து, ‘உடையவர் காலத்தில்
திருக்குருகைப்பிரான் பிள்ளான், திருவாய்மொழிக்கு விஷ்ணுபுராணத்தின் தொகை அளவில் ஓர் உரை
வகுக்க உடையவரிடத்தில் அனுமதி பெறுவதற்குச் செய்த முயற்சிக்கு அளவில்லை; ஆன பின்பு நம் காலத்தில்,
நம்மையும் கேளாமே இலட்சத்து இருபத்தையாயிரம் கிரந்தமாக இப்படிப் பரக்க எழுதினால், ஆசாரிய
சிஷ்ய சம்பிரதாயத்துக்கு அசம்பிரதாயமாகப் போங்காணும்,’ என்று அருளிச்செய்து, கிரந்தங்களை
அவர் கையினின்றும் வாங்கி, நீரினைச் சொரிந்து, கறையானுக்குக் கொடுத்து அதனை அதற்கு இரை
ஆக்கினர்: பின்னர், நம்பிள்ளை, தமது விருப்பத்திற்கு உகந்த மாணவராய்த் தம் பக்கலில் எல்லாச்
சாஸ்திரங்களையும் அலகு அலகாகக் கற்று இருப்பவராயுள்ள பெரியவாச்சான்பிள்ளையைப் பார்த்து,
‘நீர் திருவாய்மொழிக்கு ஒரு வியாக்கியானம் செய்யும்,’ என்று நியமித்தருள, ஆசாரிய நியமனத்தை
மேற்கொண்டு இவ்வியாக்கியானத்தைச் செய்தருளினார் பெரியவாச்சான் பிள்ளை.
இதைத் தவிர, மற்றைய மூவாயிரங்கட்கும் வியாக்கியானமும், பரந்த ரகஸ்ய
விவரணம், மாணிக்கமாலை, நவரத்தினமாலை,
1. தாமே இங்ஙனங் கூறுவாராயின்,
கல்வியில் இப்பெரியாருடைய வீறு
இருந்தவாறு என்னே! இச்சிறப்பினை நோக்கியே,
‘இந்திரன் வார்த்தையும் நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன்சொல் வார்த்தையுங் கற்பவர் யார் இந்தக் காசினியில்!
நந்தினம் முத்தெறி நம்பூர் வரதர் தம் மாளிகையில்
சிந்தின சொற்கள்கொண் டேசில நாடு திறைகொள்வரே.’
என்ற செய்யுள்
எழுந்தது போலும்! வரதர் என்பது நம்பிள்ளையின்
இயற்பெயர். நம்பூர்-அவர் அவதரித்த ஊர். “என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலந்தே,”
“நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே?”
(6. 4: 7, 9.) என்றாரன்றே பிரபந்த ஜன கூடஸ்தரான ஆழ்வார்?
|