New Page 1
வேற்று மக்களாலும் தன்னிலை திரிந்து மாறுபடாதபடி1 திருவாய் மொழியினைக் காத்து
நிற்றலின், இவ்வியாக்கியானத்திற்கு ‘ஈடு’ என்ற தனிச் சிறப்புப்பெயரினை நம் பெருமக்கள்
இட்டு வழங்கினார்கள். “கீழ்ச்செய்த செயல் அடங்கலும் தன் ஸ்வாதந்தர்யம் கிடக்கச் செய்தே
செய்தவையிறே. ஸ்வரக்ஷணத்துக்குத் திரு உகிராகிலும் உண்டே அங்கு; அவை போல அன்றிறே இங்கு; ஆஸ்ரிதபரதந்திரனாய்த்
தன்னை அழிய மாறி, பாண்டவர்களுக்காக உடம்புக்கு
‘ஈடு’
இடாதே எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ கீழ்ச்சொன்ன குணங்கள்!’
(திருவாய். ஈடு. 7. 5. 9.) என்ற இடத்து ஈடு என்ற சொல் ‘கவசம்’ என்ற பொருளில் வந்திருத்தல்
காண்க. ‘மாடியந் தானை மன்னர் மாமணி நாகமாக’ (சிந். 537.) என்ற செய்யுளின் விசேட உரையில்
மாடியம்-உடம்புக்கு ஈடு’ என்றனர் நச்சினார்க்கினியர்.
இனி, இது நம்பிள்ளை நாடோறும் காலக்ஷேபத்தில் அருளிச் செய்தனவற்றை
வடக்குத் திருவீதிப்பிள்ளை எழுதிவைத்ததாதலின்,
1. பண்டை இலக்கியங்கள்
தம் நிலை திரிந்து மாறுபடுதல் பெருவழக்கு
என்பதனை,
“சங்கம் என்னும்
துங்கமலி கடலுள்
அரிதின் எழுந்த பரிபாட் டமுதம்
அரசுநிலை தீரீஇய அளப்பருங் காலம்
கோதில் சொன்மகள் நோதகக் கிடத்தலின்
பாடிய சான்றவர் பீடுநன் குணர
மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின்
தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்
எழுதினர் பிழைப்பும் எழுத்துரு வொக்கும்
பகுதியில் வந்த பாடகர் பிழைப்பும்
ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம்
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலின்”
(பரிபா. உரைச்சிறப்.)
என்றதனாலும்,
சீவகசிந்தாமணியுள், ‘வேந்தொடு மாறு கோடல்’ என்ற செய்யுளின்
உரையில்
‘கந்தியாரும் இடையிடையே பாடியிட்ட செய்யுள்களிலும்
அப்பொருள் தரக் கட்டி என்று செய்யுள் செய்தார்
என்று கொள்க’ என்றும்,
‘முந்நீர் வலம்புரி’ என்ற செய்யுளின் உரையில் ‘எனவே, தேவர்
அருளிச்செய்த செய்யுள் 2700 என்றே கொள்க,’ (இப்போது உள்ள செய்.
3145) என்றும் நச்சினார்க்கினியர்
எழுதியிருத்தலானும் அறிக. மற்றும்
கம்பராமாயணம், வில்லிபாரதம் என்னும் இவற்றில் அவர்கள்
பாடல்
அல்லாத பாடல்கள் பல இடையிடையே புகுந்திருத்தல் அறிஞர் பலரும்
அறிவர்:
|