திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
57

New Page 1

அந்தஸ்தத்தைக் காட்டுமா போலே, அல்பசுருதர் கலக்கின சுருதி நன்ஞானத்துறை சேர்ந்து ஆழ்பொருளை அறிவித்தது’ (சூ. 71). “ராமாயணம் நாராயணகதை” என்று தொடங்கி, கங்கா காங்கேய சம்பவாத் அசத்கீர்த்தனம் பண்ணின 1எச்சில்வாய் சுத்தி பண்ணாமல் ‘திருமாலவன் கவி’ என்ற வாயோலைப்படியே, மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது, வேதாதிகளில் பௌருஷமானவை கீதா வைஷ்ணவங்கள் போலே அருளிச் செயல் சாரம்’ (சூ 63.) என்றார் ஆசார்ய ஹ்ருதயத்தில் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும்.

    திருவாய்மொழி, இறைவனால் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்டது போன்று, வியாக்கியானங்களும், இறைவனுடைய திருவருளுக்கு முற்றும் இலக்காய் ஆழ்வாருடைய பேரருளுக்கும் பாத்திர பூதர்களாய் வடமொழி தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் பேரறிவு படைத்தவர்களாய் இருந்த பெருமக்களால் அருளிச்செய்யப்பட்டவையாதலின், திருவாய்மொழியினைப் போன்றே வியாக்கியானங்களும் அருமை பெருமைகளை உடையன. ‘திருவாய்மொழியினால் வியாக்கியானங்களுக்கு ஏற்றமோ, வியாக்கியானங்களால் திருவாய்மொழிக்கு ஏற்றமோ!’ என்று ஐயம் தோன்றுதலும் கூடும். இவ்வியாக்கியானங்கள் மணிப்பிரவாள நடையில் அமைந்தவை; சுவானுபவத்தோடு செய்யப்பட்டவையாதலின், கற்போர்க்கும் சுவானுபவத்தை உண்டாக்கக் கூடியவை. இவற்றுள், ஈட்டின் நடையழகு தனிச் சிறப்பு வாய்ந்தது; பொருள் உணர்வோடு பயிலப்பயிலப் பேரின்பம் பயப்பது; சொல்லாற்றல் பொருளாற்றல்கள் அமைந்தது; ‘சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்’ என்னும் வனப்பு வாய்ந்தது; கூறப் புகும் பொருளை விளக்குவதற்குக் காட்டப்படும் மேற்கொள்கட்குப் பொருள் கூறும் முறை எத்தகையோரும் வியக்கத்தக்கது; பதசாரம் கூறுவதில் இந்த ஈட்டின் ஆசிரியருக்கு ஒத்தாரும் மிக்காரும் இத்தமிழ் நாட்டில் இலர்; பிற நாட்டிலும் இலர் என்றே கூறலாம்; ஒரு பதிகத்தோடு மற்றொரு பதிகத்திற்கும், ஒரு பாசுரத்தோடு

 

1. பாவைத் திருவாய் மொழிப்பழத் தைப்பசுங் கற்பகத்தின்
  பூவைப் பொருகடற் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
  கோவைப் பணித்தஎங் கோவையல் லாவென்னைக் குற்றங்கண்டென்
  நாவைப் பறிப்பினும் நல்லரன் றோமற்றை நாவலரே.

(சடகோ. 57)

  என்று ஆழ்வாரைப் பாடுதற்கு முன்னர் மற்றையோரைப் பாடிப் பயனின்றிக்
  கழிந்த காலத்திற்கு இரங்குகின்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடரும்.