Periya Puranam
| |
சீர
ணங்கிய தேவர்க ளேயலாற்
றோர ணங்களிற் றாமமுஞ் சூழுமால். |
|
(இ-ள்.)
ஆரங்களே...முழங்குமால் - வீதிகளிலே வேதங்களேயல்லாமல்
யானைகளும் எதிரெதிராக முழங்குவன; சீரணங்கிய...சூழுமால் - சிறப்பாகிய
அணங்காடல் முதலியவற்றால் அழைக்கப்பெற்ற, தேவர்களேயன்றித்
தோரணங்களிலே மாலைகளும் சூழ்ந்துள்ளன.
ஆரணமும் வாரணமும் -
ஆரணம் - வேதம்; வாரணம் - யானை;
மாறி முழங்குதலாவது - வேதங்கள் உச்சசுரமாகிய
நிஷாத சுரத்திற்
சொல்லப்பெறும்போது யானையின் பிளிறோசை போன்றிருத்தலின்,
தெருக்களில் எழும் ஓசை, வேத ஓசையும் யானைப் பிளிறோசையும் மாறி
ஒன்றற்கொன்று எதிரொலி போல முழங்கும் என்பது. நிஷாதம்
-
யானையோசை போன்றிருத்தலின் அப்பெயர் பெற்றதாம். இங்கு வேதவோசை
அந்தணர்கள் மாளிகைகளிற் பயில்வதும், திருவிழாக்களிற் பின்னே பயின்று
வருவதுமாம். யானை முழக்கும் அவ்வீதியிற் பயில்வனவும் விழாக்களில்
முன்னே செல்வனவுமாம்.
முன்னர்ப் புறநகரில் “வேத வோசையும்“
என்றும். “மல்லல் யானை
ஒலியுடன்“ என்றும் தனித்தனி கூறியதற் கேற்ப இங்கு அகநகரிலே
இவ்விரண்டும் விரவி ஒலித்தல் கூறப்பெற்றது. புறநகரிற் கூறிய வேதவோசை
அங்குள்ள வேள்விச்சாலை ஓது கிடைகளில் முழங்கியவை என முன்னரே
உரைக்கப் பெற்றது.
சீர் அணங்கிய தேவர்கள்
- சிறப்புச் செய்யும் அணங்காடல்விழா
எடுத்து அழைக்கப்பெற்ற தேவர்கள். அணங்கிய
- அணங்காடலினால்
வரைவழைக்கப் பெற்ற; “சீரணங்குற நின்ற செறுவுறு திசைமுகனோடு,
நாரணன் ... “ (திருஞான - தேவாரம்) காண்க. அணங்கு - தெய்வத்தன்மை
கொண்ட என்றும் கூறுவர்.
“பேரணங்காடல்
செய்து பெருவிழா எடுத்த பின்றை...“
-
கண்ணப்பர் புராணம் - (11) |
தோரணம்
- விழாவிற்குரியதோர் அணிவகை.
தாமமும் சூழ்தல்
- தோரணங்களில் ஒரே அளவாகப் பூமாலைகளை
அறுத்து இடையிடையே தொங்கவைப்பது அணிசெய் சிறப்புக்களில் ஒன்று.
“பெருந்தண்
கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி“ |
என்பது திருமுருகாற்றுப்படை.
சீர் அணங்கிய தேவர்களேயலால் தாமமும் சூழும் - தோரணங்கட்டிய
விழாவில் தேவர்கள் வந்து சூழ்தல் உண்டு. மாலைகள் தோரணங்களில் நெருங்கிப் பொருந்தும்.
தேவர்கள் கால் நிலந் தோயாத இயல்புடையராதலின்
மாலைகள் போலத் தோரணங்களைச்சுற்றி அந்தரத்திலே சூழ்வர் என்ற
நயப்பாடும் காண்க.
| 96.
|
தாழ்ந்த
வேணியர் சைவர் தபோதனர் |
|
| |
வாழ்ந்த
சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த வின்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வே றிடத்ததத் தொன்னகர். |
11 |
(இ-ள்.)
தாழ்ந்த...விரவுவார் - தலையிலிருந்து நிலம்வரை நீண்டு
தொங்கிய சடையுடையவர்கள், சைவர்கள், பெருந் தவசிகள், வாழ்வையடைந்த
மனமுடையவர்களாகிய முனிவர்கள், வேதியர், விரும்பிய இன்பத்
துறைகளிலே பொருந்தியவர்கள்; (என்ற இவர்கள் பலரும்) சூழ்ந்த ... நகர் -
சுற்றிச் சூழ்ந்து வாழும் பற்பல வெவ்வேறு இடங்களையுடையது அந்தப்
பழமை மிகுந்த திருவாரூர்த் திருநகரம்.
|
|
|
|