|
நின்று கூறியநிலை.
(3) வான் நிழல் கூறிய மெய்ம்மொழியும் பொருளும்
என்றுமாம். நிழல் - ஒரு பொருளின் சாயலாய்க்
காணப்பட்டு அப்பொருளை
அனுமான அளவையால் அறிவிப்பது.
வெருளின்
மெய்ம்மொழிவான் - இறைவன்; நிழல் - அவனது
திருவுருவின் பிரதிபிம்பமாகிய நம்பிகள்; அருளிய பொருளிள் -
திருத்தொண்டத் தொகையின் துணையானே; ஆம் - ஆகும் என்ற
குறிப்புப்பட உரைப்பாருமுண்டு; நம்பிகள் இறைவரது திருவுருவின்
பிரதிவிம்பம் - சாயை - என்பது - “கயிலை
நாயகன் காமரு தன்னுருப்,
பயிலு மாடியிற் பார்த்தங் கழைத்தலும், வெயில்செய் வெங்கதிர் கோடி
விராயெனச், செயிரி லாதமெய்த் தேசொடுந் தோன்றினான்” (பன் - பட - 1)
என்ற பேரூர்ப்புராணத்தாலறிக. 26-ன் கீழ் உரைப்பவை பார்க்க.
பொருள்
- உலகெலாம் என்று எடுத்துக் கொடுத்த முதல் மொழியாகிய
ஊதியம். மெய்ம்மொழி - மெய்யனுடைய மொழி;
மெய்யாகிய மொழி என்க.
இதன் விரிவு முதற்பாட்டில் காண்க.
புராணம்
பாடத் தொடங்குமுன் ஆசிரியர் சேக்கிழார் பெருமான்
நடராசப் பெருமான் திருமுன்பு நின்று வணங்கி “அடிகளே!.....உனது
அடியர்
சீர் அடியேன் உரைத்திட இடர் கெடுத்து அடி எடுத்துத் தருவாய்” என்று பிரார்த்தித்தனர்.
அதற்கு
“அலைபு
னற்பகி ரதிந திச்சடை யாட வாடர வாடநின்
றிலகு மன்றினி லாடு வார்திரு வருளி னால்அசரீரிவாக்
‘குலகெ லா’மென வடியெ டுத்துரை செய்த பேரொலி யோசைமிக்
கிலகு சீரடி யார்செ விப்புலத் தெங்கு மாகி நிறைந்ததால்” |
என்று இதனையே உமாபதி
சிவாசாரியர் திருத்தொண்டர் புராண வரலாற்றிற்
கூறியருளியது காண்க. 9
வேறு
| 10.
|
இங்கித
னாமங் கூறி னிவ்வுல கத்து முன்னாட் |
|
| |
டங்கிரு
ளிரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற
பொங்கிய விருளை யேனைப் புறவிருள் போக்கு கின்ற
செங்கதி ரவன்போ னீக்குந் திருத்தொண்டர் புராண
மென்பாம். |
10 |
இஃது இப்புராணத்தின்
பெயர் கூறியவாறு
(இ-ள்.)
இங்கு.....கூறின் - இப்புராணத்தின் பெயர்
என்னென்று
சொல்வோமாயின்; இவ்வுலகத்து....இரண்டில் அநாதிகாலந் தொட்டு இங்குள்ள
இருவேறு இருள்களுள்ளே; ஏனை...........செங்கதிரவன்போல்
- மற்றப் புற
இருளைப்போக்குகின்ற சூரியனைப்போல; மாக்கள்.....இருளை - மாக்களின்
உயிரினிடத்தே பொருந்தி நின்ற பொங்கிய அக இருளாகிய ஆணவத்தைப்
போக்குகின்ற; திருத்தொண்டர் புராணம் என்பாம் - திருத்தொண்டர் புராணம்
என்று சொல்வோம்.
(வி-ரை.)
ஆசிரியர் இதற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம்
என்பது.
புறவிருள்
போக்குகின்ற கதிரவன்போல் அகவிருளைப் போக்கும்
புராணம் என்பது கருத்து. பொருள்களைக் காணவொட்டாமற் புறஇருள்
கண்ணை மறைத்துக் கொண்டிருக்கும். ஆனால் பாரிசேட
அளவையால்தன்னையறியும்படி காட்டி நிற்கும். ஆதலின் அதற்கு வேறு
அடை மொழியின்றி ஏனை என்று இலகுவிற் பிரித்துக் கூறினார். ஆனால்
அகஇருளுக்குச் சிந்தையுள்ளே - சார்ந்து - நின்ற - பொங்கிய என மூன்று
அடைமொழி கொடுத்துக் கூறினார். அது உயிர், தன்னையும் இறைவனையும்
காணவொட்டாமல் மறைத்து நிற்கின்றதேயன்றித் தன்னையும்
மறைத்துக்கொண்டு நிற்கும் வலியுடைமை பற்றி என்க. “இருபொருளும்
காட்டா திது” என்பது சாத்திரம்.
|