பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு155

Periya Puranam
     வெண்மை - சந்திரனது நிறம் வெண்மை; அவன் குளிர்ச்சி
செய்பவன்; ஆதலின் குடையின் நிறம் வெண்மையாகக் கூறுதல் வழக்கு.
“மதிக்குடை நிழற்ற“ என்பது முதலிய திருவாக்குக்களையுங் காண்க.
அன்றியும் குடை செவ்வனே நிழல் செய்வதால் வரும் புகழின்
அடையாளமுமாம். புகழின் நிறம் வெண்மை என்ப.

     அண்ணல் - பெருமை உடையவன். இங்கு அவன் செய்த செயற்கருஞ்
செய்கையின் பெருமை குறித்தது.

     மழவிடை - மழ - என்றைக்கும் இளமையாய் இருப்பது. விடை -
அறக்கடவுள்; “தருமந் தன்வழிச் செல்கை கடனென்று“ எனவும்,
“தனிப்பெருந் தருமந்தான் ஓர் தயாவின்றி“ எனவும், “அறநெறியின் செவ்விய
உண்மைத் திறம்“ எனவும் இப்பகுதியில் விதந்து கூறிய அறத்தின்
அதிதெய்வம் அறக்கடவுளென்பது. அறக்கடவுள் என்றும் நிலைதிரியாது.
இருத்தலினால் மழவிடை எனப்பெறும். கற்ப முடிவினும் தான் முடிவுறாது
இறைவனைத் தாங்கி நிற்பது அறக்கடவுளாகிய விடை என்பர்.

     விண்ணவர்கள் தொழ
- முன்னர்த் தங்கள் தேவ உலகத்தில்
வைத்துத் தரிசித்த மூர்த்தியைப் பலநாட் பிரிந்த பின்னர், இன்று, வீதியில்
வெளிப்படக் கண்டாராதலின் விண்ணவர் மகிழ்ந்து முன்னர்த் தொழுதனர்.

     வீதிவிடங்கப் பெருமான்
- தியாகேசர். விடங்கர் - உளிபடாதவர்.
டங்கம் - உளி. உளியாற் செதுக்கப்படாமல் தானாய் உண்டானவர் -
சுயம்பு மூர்த்தி என்றபடி. விடங்கராயும், உள்ளே திருமூலத்தானத்திலே
எழுந்தருளியிருக்கும் புற்றிடங் கொண்டாராயும் உள்ள பெருமானே வீதியிலே
எழுந்தருளுவர் ஆதலின் வீதிவிடங்கர் எனப்பெறுவர்.

     தொழ நின்றான் வீதிவிடங்கப் பெருமான்
- தொழ நிற்றலாகிய
வினை (செயல்)யிலே என்றும் பிரியாது உடன்நிற்பர் ஆதலின் முன்னே
நிற்கவேண்டிய எழுவாய் ஆகிய “வீதிவிடங்கப் பெருமான்“ அச்செயலை
அடுத்துப் பின்னே நின்றார். அருளின விரைவுபற்றி இவ்வாறு பயனிலை
முன்னர்க் கூறப்பட்டது என்பதுமாம். அரசன் தன் மகனுடைய மருமத்தில்
தேராழி யுறவூர்ந்த செயலும், இறைவன் விடைமேல் நின்ற செயலும், ஒருங்கே
நிகழ்ந்தன என்பார், “உறவூர்ந்தான்“ என்றும், அதையடுத்துத் “தொழ
நின்றான்“ என்றும் கூறினார். மேலே “உறவூர்ந்தான் மனுவேந்தன்“ என்ற
இடத்துக்கூறிய பொருள்கள் எல்லாம் “தொழ நின்றான் வீதிவிடங்கப்
பெருமான்“ என்ற இவ்விடத்தும் பொருத்திக்கொள்க.

     பூமழை சொரிந்தார்
- என்பதும் பாடம். 45

131. சடைமருங்கி லிளம்பிறையுந் தனிவிழிக்குந்
                              திருநுதலும்
 
  இடமருங்கி லுமையாளு மெம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையுமுன் கண்டரசன்                            போற்றிசைப்ப
விடைமருவும் பெருமானும் விறல்வேந்தற்
                        கருள்கொடுத்தான்.
46

     சிவபெருமான் காட்ட அரசர் கண்ட காட்சியையும் பெற்ற அருளையும்
விரிக்கின்றது

     (இ-ள்.) சடை...போற்றிசைப்ப - சடையின் ஒருபக்கத்து இளம்பிறையும்,
தனித்து விழிக்கும் இயல்புடைய திருநெற்றியும், இடப்பாகத்திலே உமை
அம்மையாரும், எப்பக்கமும், சூழ்ந்த பெருமைப் பூதகணங்களும் ஆக
இக்காட்சியை (இறைவன் காட்ட) அரசர் கண்டு துதித்து நிற்க;
விடை...கொடுத்தான் - விடைப்பாகராய் எழுந்தருளிய வீதிவிடங்கப்
பெருமான் வல்லமையுடைய அவ்வரசனுக்குத் தமது நிறைந்த அருளைக்
கொடுத்தனர்.