பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு157

Periya Puranam
எனும் அப்பர் பெருமானது திருவிருத்தத்தால் உணருகின்றோம். இவ்விழி
தேவர்களின் அனுக்கிரகத்தின் பொருட்டு முருகப் பெருமான் அவதரிக்க
விழிக்கப் பெற்றதாம்.

     எம்மருங்கும் பூதகணம் புடைநெருங்கும் பெருமை - புடைஎம்மருங்கும்
நெருங்கும் பெருமைப் பூதகணமும் என்று பொருள் கொள்க. பக்கங்களில்
எங்கும் நெருங்கும் பெருமையுடைய சிவகணங்கள் என்க. இவற்றின் பெருமை
16-வது பாட்டிற் காண்க. இவைகள் எப்பொழுதும் பிரியாது இறைவனைச்
சூழப்பெற்று ஆனந்தித் திருப்பனவாதலின் நெருங்கும் பெருமை என்றார்.
உலகங்களெல்லாம் அழியும் சங்கார காலத்திலே இறைவன் திருநடனத்தை
உடனிருந்து அம்மையார் காணும்போது இப்பூத கணங்களும் தரிசித்து
ஆனந்திப்பன என்பது,

“செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பனக்கொன்
றாகத்தா னங்காந் தழலுமிழு மைவாய
நாகத்தா யாடுந் நடம்“

எனும் அற்புதத் திருவந்தாதி (99-ல்) காண்க. பூத பரம்பரையில் நிற்கும்
அடியார்களுக்கு அப்பூதங்களுடன் காட்சி கொடுத்தலே முறையாதலும்,
அத்திருக்கூட்டத்தில் அணைபவர்களே இவ்வடியார்கள் ஆதலும் இங்குக்
குறிப்பாகும்.

     விடை மருவும் - மேலே “மழவிடைமேல் ... நின்றான்“ என்ற
இடத்துக் காண்க.

     விறல் - “மெய்வண்ணம் தெரிந்துணர்ந்து“ (124) அவ்வழியே
நின்றதாகிய விறல். அப்பாட்டிலும் விறல் வேந்தன் என்றது காண்க.

     இடமருங்கில் உமையாள் - இறைவனது அருளே உருவமாக
உடையார் அம்பிகை என்பர். ‘வேந்தற்கு அருள் கொடுத்தான்' என
அருளைக்கொடுக்க வருகின்றாராதலின் அருளுருவமாகிக் கருணைப்
பிராட்டியை உடன்கொண்டு நின்றார் என்பதாம்.

     இசைப்ப - இசைக்கும்படி. கண்டு - இறைவன் காட்டக் கண்டு.
“காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே“ என்பது தேவாரம்.

     அருள் கொடுத்தான் - தனது அருளே கண்ணாகக் காணும்படி
தன்னையே கொடுத்தான். “தந்ததுன் றன்னை“, “உன்மைத் தந்தனை“ என்ற
திருவாசகங்கள் காண்க. காட்டக்கண்டார் என்பது, “அருள் கொடுத்தான்“
என்பதனால் பெறப்படும். அவனருளே கண்ணாக அவன் கொடுத்து அதனால்
காணின் அல்லாது இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன்
இறைவன் என்றுகாணமுடியாது. ஆதலின் - கண்டு போற்றிசைக்கும்
அருளைக் கொடுத்தார் என்க. போற்றக் கொடுத்தலே அருள் என்பதாம்.
அம்மையாரும் பூதகணமும் தாமுமாக இருக்கக் கண்டும் போற்றியும்
இருக்கும்படி கொடுப்பதைவிட வேறு அருள் யாது உளது? 1776 பார்க்க. 46

132. அந்நிலையே யுயிர்பிரிந்த வான்கன்று மவ்வரசன்  
  மன்னுரிமைத் தனிக்கன்று மந்திரியு முடனெழலும்
இன்னபரி சானானென் றறிந்திலன்வேந்
                          தனும்யார்க்கும்
முன்னவனே முன்னின்றான் முடியாத
                          பொருளுளதோ.
47

இது அருளின் விளைவையும் அதன் இயல்பையும் கூறிற்று

     (இ-ள்.) அந்நிலையே....உடன் எழலும் - இறந்த பசுவின் கன்றும்,
அரசனது உரிமைக் கன்றாகிய மகனும், மந்திரியும் அப்பொழுதே ஒருங்கே
உயிர் பெற்