|
உணர்ந்து
- தியானத்திற் கண்டு. அவ்வுணர்வே உருவமாகி. இது மனம்
வாசகம் முதலிய கரணங் கடந்த யோகக் காட்சி.
ஆர்வந் தழைக்கின்றான்
- அந்த யோகக் காட்சியிலே விளைந்த
ஆனந்தத்தில் அழுந்தி நிற்கின்றார்.
இன்ன
தன்மையன் என்று அறியாச்சிவன் என்பது சவிகற்பக் காட்சியில்
அறிதற்கரியவன் - அஃதாவது, இப்படியன் -
இந்நிறத்தன் -
இவ்வண்ணத்தன் - இவன் - இறைவன் என்றெல்லாம் பிரித்துக்காணுதல்.
இவ்வாறு அறிய இயலாவிடினும், நிருவிகற்ப சமாதியிலே அவன் தம்மை
ஆட்கொண்டு அளிக்கும் ஆனந்தத்தில் திளைத்து அனுபவிப்பர்
சிவானுபூதிமான்கள் என்பாராய் ‘இன்ன தன்மையன் என்று அறியாச்சிவன்’
(ஆயினும் அவன்) தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் என்று
கூறினார். இக்கருத்தையே,
“இங்ங
னிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ங னிருந்ததென் றுந்தீபற
அறியு மறிவதன் றுந்தீபற” என்று சாத்திரம் பேசும். இதனை, |
“...............
இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை யாண்டுகொண் டருளிய அற்புத மறியேனே” |
என மணிவாசகப் பெருமானும்
விதந்து கூறியருளினார்.
இதனாலே “உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்”என்பது
“அறியாச்
சிவன்” என்பதனோடு முரணாமை அறிக. இக்கருத்தையே
“உலகெ லாமுணர்ந்தோதற் கரியவன்”
என்றும், “நிலவு லாவிய நீர்மலி
வேணியன்” என்றும் முதற்பாட்டிலே கூறினார். விரிவு அப்பாட்டின்
உரையிற்
காண்க.
உன்னரும் சீர் உபமன்னிய
முனி - இப்பெரு முனிவரது சீர்கள்
உன்னுதற்கும் (நினைத்தற்கும்) அரியன ஆயினும் அவற்றுட் சிலவற்றை
வருகின்ற இரண்டு பாட்டுக்களிலும் எடுத்துக் கூறியருளுவார். இவரது சீரிற்
சிறந்ததாகிய, சிவனை உணர்ந்து ஆர்வம் தழைக்கின்ற - சிறப்பை இங்கு
முதலிற் கூறியதன்றி மேலும் தெரிக்கின்றார் என்க. 13
| 24.
|
யாத வன்றுவ
ரைக்கிறை யாகிய
|
|
| |
மாத வன்முடி
மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவருந் தொண்டினுக்
காதி யந்த மிலாமை யடைந்தவன். |
14 |
(இ-ள்.)
யாதவன் ....... மாதவன் - (உபமன்னிய
முனிவர்) யாதவனும்
துவாரகைக்கு அரசனும் ஆகிய கிருட்டிணமூர்த்தியினது; முடிமேல்
அடிவைத்தவன் - முடிமேல் தனது பாதங்களைச் சூட்டியவர்; பூதநாதன்
பொரு அரும் தொண்டினுக்கு - பூத நாயகராயுள்ள சிவபெருமானிடத்துத்
தாம் செய்யும் ஒப்பற்ற திருத்தொண்டுக்கு; ஆதி அந்தம் இலாமை
அடைந்தவன் - முதலும் இறுதியும் இல்லாத தன்மை பெற்றவர்.
(வி-ரை.)
பின்னும், அம்முனிவர், மாதவன் முடிமேல் அடிவைத்தவரும்
நிரந்தரமான சிவத்தொண்டு பெற்றவரும் ஆம் என்பது. யாதவன் - யது
மரபிற் பிறந்தவன் - கண்ணன். துவாரகை
துவரை என மருவி வந்தது.
|