பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்347

Periya Puranam

     பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ? - அழகிய
புண்ணியங்களின் விளைந்த பெரும் புண்ணிய விளைவோ? அல்லது அழகு
என்றதொரு பொருள் செய்த புண்ணியத்தின் பயன் பலவாகவும்
அவற்றுள்ளே சிறந்த புண்ணியப் பயனோ? என்றபடி.

“மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பென்னும் அதன்படிவ மேயோ“ (வரிசை 178)

என்ற பாட்டின் பொருளையும் அழகையும் இங்கே பொருத்திக் காண்க.

     புயல்சுமந்து - வில் - குவளை - பவளம் - மலர் - மதி - பூத்த
விரைக்கொடியோ? - மேகத்தைத் தலையில் சுமந்துகொண்டு, வில்லையும்,
குவளை மலரையும், பவளத்தையும், கோங்கையும், சந்திரனையும்
போன்றவைகளைத் தனது பூக்களாகக் கொண்டு பூத்ததொரு வாசனைக்
கொடியோ? என்க. கொடியின் வேறாய் அதன் அங்கமல்லாது, தலையிலே
தாங்கி நிற்கும் சுமைபோல்வதால் சுமந்து என்று பிரித்துக் கூறினார். சுமந்து
என்றதனாற் கூந்தலின் செறிவும், நிறைவும் குறிக்கப்பெற்றன. புயல் - ‘பயில்
வளர்க்குந்துளியவன் காண்' என்றபடி, கீழே கூறும் கொடி பூத்தற்கு
இன்றியமையாது முதற்கண் வேண்டப்படுவது எனுங் குறிப்பினால்
முதற்கண்ணே கூறியதுமாம். புயல் - கூந்தல். பின்னர் வருவன கொடியின்
அங்கங்களாய் அக்கொடியினின்று வேறாகாது ஒன்றாய் விளைதலின்
அவற்றைப் பூத்து என்றதாம். அவையே; வில் - புருவம்; குவளை - கண்;
பவளம் - இதழ் (வாய்); (கோங்கு) மலர் - முலை; மதி (பிறைச்சந்திரன்)
- நுதல் என மேலே பெண்ணோ என்ற ஐயத்திற்கு உரிய அங்க
இலக்கணங்களுடன் பொருத்திக் காண்க.

“திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லையி னொல்கி....“

என்ற திருக்கோவையாரையும் அதன் கீழ்ப் பேராசிரியர் உரைத்தவற்றையும்
இங்குப் “பூத்தவிரைக்கொடி“ என்றதின் வைத்துத் தமிழின் சுவை கண்டு
களிக்க.

     விரைக்கொடி - மேலே கண்ட அங்கங்களாகிய பொருள்கள் உருவக்
காட்சியாய்க் கண்ணுக்குப் புலனானவை. அன்றி இக்கொடி வாசனையும்
தந்தது என்பார் விரைக்கொடியோ என்றார். மணமிலாப் பூக்கொடிகளைக்
காட்சியளவில் கண்டுகளிக்கும் மக்களும் உளராதலின் இது இவ்வாறன்றிப்
பூத்தலுடன் விரையும் தரும் கொடி என்றார்.

     ‘மலர்மதி' என்று கொண்டு நிறைவாய் மலர்ந்த முழுமதி எனக்
கூறினுமாம். கொடி - அம்மையாரது உடம்பு. கொடியை இடையென்று
கொள்வாருமுண்டு. மேற்கூறியவற்றோடு ஒன்றாகாது அவற்றிற்கு வேறாகிய
இருப்பிடமாதல் வேண்டும் ஆதலின் அது உரையன்றென்க. வில் முதலிய
ஏனைய அங்கங்களாகிய பூக்களைப் பூத்துநிற்பதும், மணம் வீசுவதும்
இக்கொடி என்பார் பூத்த விரைக்கொடி என்றார். அவ்வங்கங்களிலே
முன்னர் (280) அம்மையாரது இளங்காட்சியில் கண்ட மானிளம்பிணை -
குவளையாகவும்; வளர் இளமுகை - மலராகவும்; வாசத்தேனிளம்பதம் -
விரைக் கொடியாகவும்; வேலைத்திரையிளம் பவளவல்லிக் கானிளங்கொடி
பூத்த பவளமாகவும்; திங்கட்கதிர் இளங்கொழுந்து மதியாகவும்;
தனியிளந்தனு - போர்த்தகுதி பெற்ற வில்லாகவும் முதிர்ந்து விளைந்து
இப்பாட்டில் நம்பிகள் உள்ளத்தே தொழில் செய்தல் காண்க.
விற்பூட்டிற்குத் தகுதிபெற நின்றனவாய்ப் பூட்டாமல் நின்ற
முன்பாட்டிற் கண்ட இரு பொருள்களும் இங்குப் பூட்டிக்கொண்டு
விற்குவளையாயினமையும் காண்க. மலர் - தாமரை எனக்கொண்டு முகம்
என்றுரைப்பாரு முண்டு.

     அற்புதமோ - பெருமிதமும் மகிழ்ச்சியும் தருவதொரு உள்ள நிகச்சி.
அது இன்னதென்றறியப்படாமல் அனுபவிக்கப்பெறும்போது அற்புதம் என்று
பெயர்