|
சொரிந்தான்
வந்து - மேலே இருந்தாள் வந்து என்றதற்
குரைத்தபடி கொள்க. சொரிதல் - மிகுதியாகப் பெய்தல். மழை சொரிந்தது -
என்புழிப்போல.
பெருஞ்சிலையிள் வலிமை
காட்டிச் சொரிந்தான் - மதனனது
வில் சிவபெருமான் ஒருவரிடத்தேயன்றிப் பிறர் எல்லாரிடமும் சென்று செயல்
புரியும் வன்மை யுடைத்தாதலின் பெருஞ்சிலையின் வலி என்றார்.
பெருமை - தோலாத தன்மை. பரவையாரின் திருமணம் இறைவன் நியதியின்
வழியே நிகழ்வ தொன்றாதலின் மாரன் அம்புகளின் செயல் எல்லாம்
அந்நியதிக்குத் துணைசெய்த மட்டிலே அமைந்து நின்று, சிலைவலியாகிய
வில் வித்தை காட்டிய அளவே நின்றன என்பார் வலிகாட்டிச் சொரிந்தான்
என்றார். சொரிதலின் பயன் அவ்வளவே என்க. இத்திருமணம் மதனன்
செயலாகிய காமத்தின் காரணமாக நிகழ்ந்ததன்று என்பது குறிக்கக் காட்டி
என்றார்.
தளிர்குளிரப் - என்பது பாடம். 173
| 320.
|
மலரமளித்
துயிலாற்றாள்; வருந்தென்றன்
மருங்காற்றாண்: மங்குல் வானி
|
|
| |
ணிலவுமிழுந்
தழலாற்றா; ணிறையாற்றும்
பொறையாற்றா; ணீர்மை யோடுங்
கலவமயி லெனவெழுந்து கருங்குழலின்
பரமாற்றாக் கைய ளாகி
யிலவவிதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்தாற்றா
மையின்வறிதே யின்ன சொன்னாள். |
174 |
(இ-ள்.) மலர்
......... தழல் ஆற்றாள் - [பூம்படுக்கையிலே வீழ்ந்த
பரவையார் - 318] அந்த மலர் அமளியிலே படுத்துத் துயிலைச்
செய்யாதவராய்; நிலாமுற்றத்திலே துயிலை விளைக்கக் கூடியதாய்த் தமது
பக்கத்திலே வந்து மெல்லென வீசும் தென்றற் காற்றுத் தமதுமேலே பட
அதனையும் பொறாதவராயினர்; மேகங்கள் தவழும் ஆகாயத்திலிருந்து
ஒளிவீசும் நிலாவினுடைய கதிர்கள் நெருப்பை உமிழ்தலால் அவ்
வெப்பத்தையும் பொறுக்க முடியாதவராயினர்; நிறை ...... ஆற்றாள் -
தமக்குரிய தன்மையோடு காக்கின்ற பெண்மைக் குணமாகிய நிறையைக்
கொண்டு செலுத்த வல்ல பொறை எனும் சத்தியைத் தாங்க இயலாத
வராயினர்; நீர்மையோடும் ..... ஆகி - (மலரணையில் வீழ்ந்து கிடந்தவர்)
இக்குணத்துடன் சிறிய தோகைமயிலைப்போல எழுந்து தமது கரிய கூந்தலின்
பாரத்தையுந் தாங்கமுடியாத நிலையுடையாராய்; இலவ ........ சொன்னாள் -
இலவம் பூப்போன்று இயல்பிலேயே சிவந்த வாய் நெகிழ்ந்து தரிக்கலாகாத
வருத்தத்தாலே தமக்குத் தாமே பின்வருமாறு சொல்வார் ஆயினார்.
(வி-ரை.)
நிலா முற்றமும், மலர் அமளியும், தென்றலும் உடற்கின்பம்
செய்து, துயில்வர உதவி, ஏனோர்க்கெல்லாம் இன்பம் தரும் பொருள்கள்.
ஆயின் இணைபிரிந்தார்க்குக் காதல்நோய் மனத்தில் வளர்ந்து பொங்குதலால்
இவையே துன்பந்தருவன ஆயின என்பதை விளக்க, ஆற்றாள் ஆற்றாள்
எனத் தனித்தனி ஒவ்வொன்றுடனும் கூட்டி உரைத்தார்.
மலர் அமளித் துயில்
- மலர் பரப்பிய அமளியிலே துயிலுதல்.
அமளி - படுக்கை. முன்னரும் மலர்ச்சேக்கை என்றதும் காண்க.
வரும் தென்றல்
- மேலே 283-ம் திருப்பாட்டிற் கண்டபடி
மலையத்திற் பிறந்து நீர்நாட்டின்வழி அணைந்தும், நம்பிகள்பாலும் அழல்
வீசி வருகின்ற தென்றல் என்க.
மங்குல் வானில் நிலவு
உமிழ் தழல் - நிலவு குளிர்ந்தது; அது
வரும் வழியும் குளிர்ந்த மேகமண்டலமாம்; எனவே மிகக் குளிர்ச்சி
விளைக்கவேண்டிய பொருள் என்பது குறிக்க மங்குல் வானில் நிலவு
என்றார்.
|