பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்387

Periya Puranam

     நிறையாற்றும் பொறை - நிறையாகிய ஒழுக்கத்தைக்
கொண்டுசெலுத்தக்கூடிய பொறையை.

      கலவ மயில் - குழற்பாரம் மயிற்றோகையை ஒத்திருந்தது என்க.
கலவம் - தோகை. மயில் சிறிதாயினும் பெருந்தேகையின் பாரத்தைத்
தாங்கும். இந்த மயிலோ (மயில் போன்றாரோ) குழலின் பாரமும் தாங்க
இயலாதபடி அவ்வளவில் மெல்லியள் ஆயினள் என்பார் கையள் ஆகி
என்றார்.

      செந்துவர் வாய் - செவ்விய பவளம்போன்ற நிறமுடைய வாய்.
“செந்துவர்வாய்க் கருங்கண் வெண்நகைப் பண்ணமர் மென்மொழியீர்“,
“செந்துவர் வாயுமைபங்கன்“ என்ற திருவாக்குக்கள் காண்க.

      வாய் நெகிழ்தல் - வாயினை இயல்பாலே திறந்து சொல்லாமல்
இதழ்கள் மெல்ல அசைந்து நெகிழச் சொற்கள் தடுமாறிச் சொல்லத்
தொடங்குதல்.

      வறிதே - தமக்குத்தாமே. ஒருபயன் குறித்து எவரையும் நோக்கிக்
கூறாது ஆற்றாமையாலே சாற்றுதலின் வறிதே என்றார். வறிது - பயனின்மை.
அலக்ஷ்ய வாக் என்றார் காளிதாசர். (குமாரசம்பவம்) வறிது - சிறிது
என்றலுமாம். 174

      இன்ன - பின்வருபவை.

      பொறையாற்றா நீர்மை - என்பதும் பாடம்.

                          வேறு

321. “கந்தங் கமழ்மென் குழலீ!ரிதுவென்?
     கலைவாண் வதியங் கனல்வா னெனையிச்
 
  சந்தின் றழலைப் பனிநீ ரளவித்
     தடவுங் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்திங் குலவுந் நிலவும் விரையார்
     மலயா னிலமும் மெரியாய் வருமால்;
அந்தண் புனலும் மரவும் விரவுஞ்
     சடையா னருள்பெற் றுடையா ரருளார்.“
175

     (இ-ள்.) கந்தம்......கனல்வான் எனை - வாசனை வீசும் மெல்லிய
கூந்தலையுடைய சேடியர்களே! இது என்ன ஆச்சரியம்! அமிர்த
கலைகளுடைய ஒளிவீசும் சந்திரனோ என்னைச் சுடுவாயினாயினான்;
இச்சந்திரன்......தவிரீர் - இந்தச் சந்தனக் குழம்பைப் பனிநீருடன் கலந்து
என்மேல் பூசுகின்ற கொடியீர்களே! நீவிரோ இச்செயலைத் தவரீர்! தவிரீர்;
வந்து........வரும் ஆல் - இங்குவந்து உலாவி நிற்கும் தென்றலோ
தீயுருவமாய் வருகின்றது; அம்......அருளார் - அழகிய குளிர்ந்த கங்கைப்
புனலையும் பாம்பையும் ஒருங்கே தம்மிடத்து வைத்த சடையவராம்
சிவபெருமானது அருள்பெற்று என்னை உடையாராகிய நம்பிகளோ
என்பால் அருள் செய்கின்றாரில்லை.

     (வி-ரை.) கலைவாண் மதியம் கனல்வான் - அமுத கலைகளால்
ஒளி வீசுபவன் அதற்கு மாறாகக் கனல் வீசுகின்றான் என்றதாம். திணை
வழுவமைதி. கனல்வான் - வானீற்றுத் தொழிற்பெயராகக் கொண்டு
கனலுதல் என்றுரைத்தலுமாம். எனை - யாது காரணம்பற்றி என்று பொருள்
கூறுவாருமுண்டு. விரகத்தாற் கூறும் மொழியாதலின் திணையும் காலமும்
மயங்கக் கூறினார் என்றலுமாம். எனை - என்னை.

      சந்தின் தழலைப் பனிநீர் அளவித் தடவும் கொடியீர்! - சந்து -
சந்தனம். மேலே “ஆரநறுஞ் சேறாட்டி அரும்பனிநீர் நறுந்திவலை அருகு
வீசி“ எனச் சொன்ன உபசாரம் இங்கே குறிக்கப் பெற்றது. நீங்கள்
தடவுகின்றது சந்தனம் அளைந்த நீராயில்லாமல் நெருப்பையே
தடவுகின்றதா யிருக்கிறதே.