“நின்,
றிருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களு மனைவியு மொக்கலுந் திருவும்
பொருளென நினையா துன்னரு ளினைநினைந்
திந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தன ரொதுக்கிச்
சின்னச் சீரை துன்னற் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவ லோடொன் றுதவுழி யெடுத்தாங்
கிடுவோ ருளரெனி னிலையினின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேவி யோவாத்
தகவெனு மரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயி ரனைத்தையு மொக்கப் பார்க்குநின்
தெய்வக் கடவுட் டொண்டர்“ |
| -பதினொராந்
திருமுறை - திருவிடை - மும்மணி - 7 |
முதலிய திருவாக்குகளிற்
கண்ட இலக்கணங்களும், அவற்றிற் கிலக்கியமாய்
விளங்கும் சிறுத்தொண்டர், இயற்பகையார் முதலிய நாயன்மார் சரிதங்களும்
காண்க.
இருமை
- “இருமை வகை தெரிந்து“ என்ற குறளிற் பரிமேலழகர்
இருமை யென்பதற்குப் பிறப்பு வீடென்று உரைகண்டார். வீட்டைக் கடந்த
நிலை வேறின்மையாலும், இங்கு இருமையுங்கடந்து என்றமையாலும் ஈண்டு
மேலே கண்டவாறுரைக்கப் பெற்றது. இருமை - எண் குறித்ததாகக் கொண்டு
பிறப்பும் இறப்புங் கடந்த பேராவியற்கை பெற்றார் என்றலுமாம்.
“பெத்தத்துந்
தன்பணி யில்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி யில்லை முறைமையால்
அத்தற் கிரண்டு மருளா லளித்தலாற்
பத்திப் பட்டோர்க்குப் பணியொன்று மில்லையே“ |
| -எட்டாந்
தந் - 507 |
என்ற திருமூலர் திருமந்திரக்
கருத்தினைக்கொண்டு இவர்நிலையினை
இவ்வாறுரைத்தலும் ஒருவகையாற் பொருந்துவதாம். “வீடும் வேண்டா
விறலின் விளங்கினார்“ என்றதும் காண்க.
இவ்வாறன்றி இதற்கு இருவினைகளையும், இன்ப துன்பங்களையும்,
பிறப்பிறப்புக்களையும், ஒழித்தவர் என்று கூருவாருமுண்டு.
இவரை
- அண்மைச் சுட்டு. இதோ இங்கு முன்னர்த் தேவாசிரியனிற்
கூடியிருக்கும் இவர் எனக் காட்டிக் குறித்தபடியாம்.
அடைதல்
- அடிமையாகச் சேர்ந்து அவர்களோடணைதல். 196
343. (வி-ரை.)
ஏதம் தீர் நெறி - குற்றங்கள் தீர்தற் கேதுவாகிய
நெறி. “ஏத மானவை தீர்க்க விசைந்தன“ (339) என்றமை காண்க. இங்கு
நெறி என்றது அடியவர் கூட்டத்து அணைவதனை. இது சிவஞானபோதம்
12-ம் சூத்திரத்திலே விதந்து பேசப் பெறுவதாம். இப்புராணத்தி
னுட்பொருளாய் விளங்குவது இதுவே. மலந்தீர்ந்த சீவன்முத்தர்க்கும்
வாசனாமலத்தையும் வாராமற்காத்துதவுவது அடியார் கூட்டமேயாம்
என்பது சாத்திரம். தீர்த்தல் - தீர்தற் கேதுவாதல்.
நீதியால்
- அடியவர் வணக்கத்திற்குச் சாத்திரங்களில் விதித்தபடி.
“ஆசையொடு
மானடியா ரடியாரை யடைந்திட்
டவர்கரும முன்கரும மாகச் செய்து |
|