|
தன்மைகளையும் உணர்த்தி,
அவர்களைப் பாடுவதற்காகத் “தில்லைவா
ழந்தணர்த மடியார்க்கு மடியேன்“ என்று அடியெடுத்துக் கொடுத்தருளினர்.
அவ்வாறே தொடங்கி நம்பிகள் திருத்தொண்டத்தொகை என்ற
திருப்பதிகத்தை உலகமுய்யப்பாடி, அடியார்களை வணங்கி அவர்கள்
மகிழுமாறு அவர்கள் நடுவுள் அணைந்து வீற்றிருந்தனர்.
அவர்சொல்லிய தமிழ்முறையிலே அந்த அடியவர்களது
திருத்தொண்டின் வரலாறுகளை விரித்துகூறித் துதிக்க
முயல்கின்றேன் என்பது.
கற்பனை :-
(1) ஒவ்வோர் உயிரும் தான் பிறவி எடுக்க நேர்ந்த
கருமங்களையே அநுபவித்துக் கழித்தல்வேண்டும் என்றும், மேலும் மேலும்
வினைகள் வந்து சேரும்படி மனம் செல்லும்போது தடுத்து
ஆட்கொள்ளவேண்டும். என்றும் இறைவனை வணங்கி வரம்பெறுதல்
வேண்டும். இதுவே இப்பகுதியிற் சிறந்த கற்பனையாம் என்பது முன்னர்
62 - 184 - 185 பக்கங்களிற் காட்டப் பெற்றது.
(2) குழந்தைகளுக்குத் தாந்தாம் வழிபடு கடவுளரின்
பேரை வைத்து
வழங்குதல் சிறந்த பயன் றரும். நம்பிகள் திருவாரூர்த் திருமூலத்தான
நாதரின் அடிப்பேர் வைத்தழைக்கப்பெற்ற அதனால் யாவரும் பெற்ற
பெரும்பேறு காண்க.
(3) மன்னவர் திருவில் வளர்ந்த காலத்தும் குலவொழுக்கத்தினை
விடாமற் பாதுகாத்துக்கொண்டனர் நம்பிகள் என்பது இந்நாள் மாக்கள்
உணர்ந்து பின்பற்றத்தக்க சிறந்தகற்பனை. காரணமின்றியும்,
அற்பகாரணங்கொண்டும், தத்தம்குலவொழுக்கங்களைக் கைவிட்டு
அலங்கோல வாழ்க்கையிற் றிரிந்து அலைந்து கெடுவது இந்நாளிற்
பெருவழக்காய்விட்டது. நரசிங்கமுனையரையர் காதன்மகனாய் வளர்ந்த
நம்பிகள் தமது வைதிக மரபில் வைகிய பெருமையை உலகம்
உணரக்கடவது. 192, 193 பக்கங்கள் பார்க்க.
(4) மணமுதலியவற்றிலே சடங்குகள் வேண்டியதில்லை
என்போர்
நம்பிகளது திருமணத்திற் போந்த விதிச் சடங்குகளை அறிந்து பின்பற்றக்
கடவர்.
(5) உலகிலில்லா வழக்கு மேலிட்டுக் கல்யாணப்
பந்தரிற் கலகம்
செய்யப்போந்த கிழவேதியரிடம் நம்பிகளும் மறையோரும் நீதிசபையினரும்
நடந்து கொண்டு வணக்க வொழுக்கம் உலகம் அறிந்து பின்பற்றற்குரியதாம்.
(6) இந்த மாநிலத்தில் இல்லா வழக்கென்றும்,
தமது குலத்துக்கு இழிபு
தரும் வழக்கென்றும் உணர்ந்தும் திருவெண்ணெய்நல்லூர் நீதிமன்ற வேதியர்
துலைக்கோல் போல் நின்று ஒருபாற் கோடுதலின்றி வழக்கை ஆய்ந்து
தீர்த்தது இந்நாள் நீதிமன்ற உலகம் பெரிதும் உணர்ந்து பின் பற்றத்
தகுந்ததாம். 225-ம் பக்கம் பார்க்க.
(7) தடுத்தாட்கொள்ளப் பெற்ற நம்பிகள் பின்னருந்
தவநெறி
வேண்டிப் பெற்றது உயிர்கள் உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மை.
(8) மணந்தவிர்ந்த பின் சடங்கவியாரது மகளார்
நம்பிகளையே
உணர்ந்துநின்று, அதன் வழியே சிவலோகமும்பெற்ற பேறு இந்நாட்
சீர்திருத்தம் பேசுவோர் உணர்ந்து கொள்ளத்தக்கது. இதுவே உலகம்
பின்பற்றி ஒழுகத் தக்க உயர் வழியாம். திலகவதியம்மையார் சரிதமும்
காண்க.
(9) திருவதிகையிலும், திருக்கழுமலத்திலும் உள்ளேயும்
மிதிக்கலாகாது
என்று நம்பிகள் புறத்துநின்று தொழுது சென்ற உயர்நெறியை உலகம்
உணர்ந்து உய்வதாக. திருத்தலங்களுட்சென்று வாழ்வோர் அதனுள்ளே
போந்திடினும், அங்கு அனுசிதங்களையேனும் செய்யாதுவிடுதல் பெரும்
புண்ணியமாம். தலங்களில்வாழ்வோர் தாமும், அங்குக் கடவுள் நினைப்பும்,
பெரியோர் நினைப்பும் இன்றியே நின்று வருதல் பெரும்பாவமுமாம்.
(10) இறைவனது திருநடங் கும்பிடப் பெற்று மண்ணில்
வந்த பிறவியே
இன்பம்; அவ்வாறு பெறாத பிறவிகள் மேன்மேலும் துன்பத்துக்கே
ஏதுவாவன - பேசாத நாள் எல்லாம் பிறவாநாள் - என்பது நம்பிகள்
திருத்தில்லை தரிசனத்திற்கண்ட பேறு.
(11) பண்டை. விதி கடைகூட்ட நிகழ்வனவாம் மணம்
முதலிய
உலகானுபவங்கள் கருமக் கழிவுக்கும், இறுதியில் வீட்டுக்கும் காரணமாம்.
அவ்வாறன்றி ஏனைப்புலன்வழியே சென்று நிகழ்வனவாகிய கருமங்கள்
பிறவிக்குக் காரணமாம். உலகானு பவங்களை இறைவ னருள் வழியே நின்று
அனுபவித்தலே முறை.
|