பக்கம் எண் :


436 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

நின்றன என்று சொல்லத்தக்க பெரியோர். ஆயினார் - ஆயினார்களும்.
சிறப்பும்மை தொக்கது. ஆயினார் - ஆற்றினார் எனத் தனித்தனிப் பிரித்து
இவர்களுக்கே கூட்டி முடித்தலு மொன்று.

     ஆற்றினார் - ஆறு - ஒழுக்கம். இங்கு நல்லொழுக்கத்தின்
மேனின்றது. “நல்லொழுக்கந் தலைநின்றார்“ (திருநீல - புரா - 31).
ஒழுக்கத்தினை மேற்கொண்டவர்.

     பெருகும் - மேன்மேற் பெருகிச் செல்லும். அடித்தவம் -
திருவடியையே பற்றுக் கோடாகக் கொண்டு அதனை அடையச்செய்யும்
பூசை. “கொய்து பத்தர்மல ரும்புன லுங்கொடு தூவித்துதிசெய்து,
மெய்தவத்தின் முயல்வார்“ - திருஞா - நட்டபாடை - திருப்புகலூர் (10).

     வாழ்வார் - அத்தவத்தையே தமது வாழ்வாகக் கொண்டவர்கள்.

     முன்னிரண்டு பாட்டுக்களிலும் இப்பாட்டினுங் கூட்டி ஐந்து முறை
போற்றி என்றது ஐந்தொழில் நடனத்தைத் திருவைந்தெழுத்தாற் போற்றிய
குறிப்பாம்.

     இறைவனுக்கு உரிய தொண்டினைச் செய்யும் இவ்வுரிமைச்
சிறப்புப்பற்றியே இவர்களைத் திருஞானசம்பந்த நாயனார் தமது
திருப்பதிகத்திலே முதலில் வைத்துப் பாடியருளினர் என, “ஊழி
முதல்வர்க்குரிமைத் தொழிற்சிறப்பால், வாழி திருத்தில்லைவாழந்தணரை
முன்வைத்தே“ (திருஞா - 161) என்று பின்னர் ஆசிரியர் அறிவித்தனர். 3

353. பொங்கிய திருவி னீடும் பொற்புடைப் பணிக
                                  ளேந்தி
 
  மங்கலத் தொழில்கள் செய்து மறைகளாற் றுதித்து
                                  மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பிற் றகும்பணி தலைநின்
                                 றுய்த்தே
யங்கணர் கோயி லுள்ளா வகம்படித் தொண்டு
                                செய்வார்,
4

     (இ-ள்.) வெளிப்படை. பெருகுகின்ற செல்வத்திற் சிறந்த அழகிய
திருவாபாணங்களை விதிப்படி அழகுபெற இறைவனது திருமேனியிற்
சாத்தி அலங்கரித்து, வேத மொழிகளாலே தோத்திரஞ்செய்து, தாம்
செய்தற்கேற்றனவாகிய உரிய பிற பணிகளையும் சிறக்கச் செய்து,
இறைவன் திருக்கோயிலுக்குள்ளே அகம் படிமைத் திருத்தொண்டுகளைச்
செய்து வருவார்கள் (இவர்கள்);

     (வி-ரை.) திரு - கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்.
இது அப்பணிகளின் உள்ள மணிகள், வேலைப்பாடு முதலிய சிறப்பாலும்,
அவை இறைவனுக்குரிய தன்மையாலும், அவன் றிருமேனியைச் சிங்காரித்து
அழகுபார்க்கும் வண்ணம் அடியார்கள் மனத்தே விளைக்கும் விருப்பினால்
மிகச் சிறந்தனவாயின. ஆதலின் பொங்கிய திருவின் நீடும் என்றார்.
திரு - அருட் செல்வமெனவும், பணி - தொண்டு எனவும் கொண்டு,
அருட் செல்வத்தின் மேம்பட்ட திருத்தொண்டுகளை மேற்கொண்டு
என்று கூறுதலுமொன்று. அடித்தவம் புரிந்து வாழ்வார் என மேற்பாட்டிற்
கூறியதனைத் தொடர்ந்து விரித்தபடியாம். ஏந்தி - இக்காலத்தும்
பூசைமுறையுடையோர் பொற்பணிகள் அணிவதாலும், ஏந்தி எனத் தன்
வினையிற் கூறலாலும், பணிகள் ஏந்தி - பணிகளை அணிந்துகொண்டு -
என இதனை அந்தணர்க்கே ஏற்றிக் கூறுவாருமுண்டு.

     மங்கலத் தொழில்கள் - அணிகள், மணிகள், ஆடை, மாலை
முதலியவற்றை அணிந்து அலங்கரித்தல்.

மறைகளாற்றுதித்து -

“பணிந்தெழுந்து தனிமுதலாம் பரனென்று பன்முறையாற்
றுணிந்தமறை மொழியாலே துதிசெய்து“

                            - கண் - புரா - 140

என்றது காண்க. இவை வேதத்தின் துதி வசனங்களாகிய நமக சமகங்கள்,
உருத்