|
திரம், இறைவனது தன்மை
கூறும் உபநிடத வசனங்கள், சிவாகம வசனங்கள்,
தேவார திருவாசக முதலிய தமிழ்மறைகள் முதலியனவாம்.
மங்கலத் தொழில்கள்
- என்றமையால் ஆகமவிதிப்படிக்குரிய
ஆவாகனாதி வல்லாப் பூசங்கங்களும், மற்றும் தரும்பணி
என்றமையாற்
சாமரம், விசிறி முதலிய உபசாரங்களும் கொள்க. மங்கலத்
தொழில்கள்
என்றது நித்திய பூசையும், விழாச் சிறப்புக்களுமாம்.
அகம்படித்தொண்டு
- திருக்கோயிலுக்குள்ளேயும், இறைவனது
திருமேனியைச் சார்ந்து அணித்தேயும் செய்யப்பெறும் அபிடேகம் முதலிய
திருப்பணிகள்.
“அருவரைவில்
லாளிதனக் ககத்தடிமை யாமதனுக்
கொருவர்தமை நிகரில்லார்“
-
புகழ்த்துணை - புரா - 1 |
திருக்கோயிலுள்ளிடமன்றிப்
புற முன்றில்களிலும், வெளிப்புறத்தினிலும்
திருவலகு திருமெழுக்கிடுதல், திருவிளக்கிடுதல், கீதம் பாடுதல், ஆடுதல்,
திருவீதி யலங்கரித்தல் முதலியன புறத்தொண்டு
எனப்பெறும். “நாளைப்,
போவா னவனாம் புறத் திருத்தொண்டன்“ என்றதும் காண்க. 4
| 354.
|
வருமுறை
யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான்
மல்கத்
|
|
| |
தருமமே
பொருளாக் கொண்டு தத்துவ நெறியிற்
செல்லும்
அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்று
வல்லார்;
திருநடம் புரிவார்க் காளாந் திருவினாற் பொலிந்த
சீரார்;
|
5 |
(இ-ள்.)
வெளிப்படை. அறத்தையே பொருளெனக் கைக்கொண்டு,
தத்துவ வழியிலே செல்கின்ற, நால்வேதங்களையும் ஆறங்கங்களையும்
மிகப் பயின்று அவற்றிலே வல்லாராய், உலகம் அருள்பெற்று
வாழும்பொருட்டு, விதிமுறையில் வரும் ஆகவனீயம், தட்சிணாக்கினி,
காருகபத்தியம் என்னும் மூன்று எரிகளையும் வழுவாது வளர்த்துக் காத்து,
அருள்நடம் புரியும் இறைவனுக்கு ஆட்செய்யப் பெற்ற
அருட்செல்வத்தினாலே சிறந்துவிளங்கும் சீர்மையுடையாராவர்
(இவ்வந்தணர்கள்);
(வி-ரை.)
வருமுறை - உண்மை : நூல்களில்
விதித்த முறையிலே
வருகின்ற முறை வரும் என மாற்றி உரைக்க.
எரிமூன்று
- மூன்றுவகைப்பட்ட எரி. அவற்றுள் ஆகவனீயம்
-
தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில்
வளர்க்கப்படுவது. தெற்கில் அரைச்சந்திர வடிவமான குண்டமிட்டு அதில்
வளர்க்கப்பெறுவதால் தட்சிணாக்கினி எனப்
பேர் பெற்றது பிதிரர்களுக்
குரியதென்பர். காருகபத்தியம் ஆகவனீயத்தை அடுத்து வட்ட வடிவமைந்த
குண்டமிட்டு வளர்க்கப் பெற்று, இல்வாழ்வோரால் ஓம்பப்பெறுவதால்
அப்பெயர் பெற்றது. எரி மூன்று - வைதிகாக்கினி,
சைவாக்கினி,
வைந்தவாக்கினி என்பதுமொன்று.
ஓம்பி
- இறக்கும் வரை காக்கப்பெறுவது. இறந்தால் அக்கிரியைக்கும்
இதுவே உதவுவது.
மன்னுயிர்
- உலகிற் பிறக்கும் உயிர் யாவையும். மன்
- நிலைத்தல்.
உயிர்கள் நித்தமாதலின் மன்னுயிர் என்றார். “நின்னளந் தறிதல் மன்னுயிர்க்
கருமையின்“ - திருமுருகாற்றுப்படை.
தருமமே பொருளாக்
கொண்டு - அறத்தையே குறிக்கோளாக
உட்கொண்டு,
ஆறு அங்கம்
- இவை வேதத்துக்கு அங்கமாகப் பொருந்துவன.
ஆறங்கம் - சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம்,
நிருத்தம், சந்தோவிசிதி,
சோதிடம் என்பன. இவற்றைக் கற்று நிரம்பிய பின்னரே வேதப்பொருள்
- “கற்க; கசடற“
என்றபடி பயின்றது மாத்திரமன்றி
|