பக்கம் எண் :


440 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     தானம - சற்பாத்திரமறிந்து செய்தல். அதாவது
சிவஞானிகளிடத்துச் செய்தல்.

“அகர மாயிர மந்தணர்க் கீயிலென்? - சிகர மாயிரஞ்
                         செய்து முடிக்கிலென்?,
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு - நிகரிலை யென்பது                                நிச்சயத் தானே“
                          - ஏழாந்தந்திரம் - 157

“திலமத் தனையே சிவஞானிக் கீந்தால் - பலமுத்தி                       சித்திபரபோக முந்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே“

                      - இரண்டாந் தந்திரம் - 165

முதலிய திருமந்திரங்கள் காண்க.

     தவம - சிவபூசை. முன்னர் உரைத்தவை காண்க. தவங்களிற்
சிறந்ததாய்ச் சிவனை நேரே கூட்டுவதால் தவமாவது சிவபூசை என்க.
உற்ற நோய்நோன்றலும் உயிர்க்குறுகண் செய்யாமையுமாம். மிக்கார்
தானம் எனக்கூட்டி (நூல்) வல்லார்கள் உரைத்த பகுதிப்படி தானம்
தவம் சார்ந்தவர் எனக் கூட்டி யுரைத்தனர். மகாலிங்கையர்.

     ஊனம் - குற்றம் - அதனாலாகிய பிறவி. இல்லார் - பிறவி
விதையைத் தானந் தவமாதிகளால் மேல் முளையாது செய்தவர்.
342 பார்க்க.

     மானம் - “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்“ - குறள்.

என்றபடி உயிர் கொடுத்தும் தமது கொள்கையைத் தவறாது காப்பவர்.

     பொறை - “பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி“
- ஸ்ரீ கயிலாயம் போற்றித் திருத்தாண்டகம் - 5

357. செம்மையாற் றணிந்த சிந்தைத் தெய்வவே தியர்க
                                  ளானார்
 
  மும்மையா யிரவர் தாங்கள் போற்றிட முதல்வ
                                   னாரை
இம்மையே பெற்று வாழ்வா;ரினிப்பெறும்
                         பேறொன் ரில்லார்;
தம்மையே தமக்கொப் பான நிலைமையாற்
                        றலைமை சார்ந்தார்;
8

என்றபடி பூமி பொறையுடைமைக்கு இலக்கியமாவது.

“அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த றலை“ என்றார் நாயனார்.

     மனையறம - இல்லறம். இது, “இல்லற மல்லது நல்லற மன்று“,
“முயல்வாரு ளெல்லாந் தலை“, “புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்“,
“நோற்பாரி னோன்மை யுடைத்து“, “வானுறையுந் தெய்வத்துள்
வைக்கப்படும்“ என்பனவாதி புகழ்களாலே பெரியோர் பாராட்டும்
பண்புடையதாய், நூல்களில் விதித்தபடி ஒழுகும் இல்வாழ்க்கையாம்.    7

     (இ-ள்.) வெளிப்படை. செம்மைத் தன்மையின் நிறைவினாலே
ஆணவ நீங்கித் தணிவுபெற்ற சிந்தையுடைய தெய்வத்தன்மை வாய்ந்த
மூவாயிர வேதியர்கள் இம்மையிலேயே இறைவனைத் தாம் போற்றி
வாழும்படிக் கைவசமாகக் கிடைக்கப்பெற்று வாழ்கின்றவர்கள்; ஆதலின்
அவர்கள் இனிப் பெறுவதாய இதனின் மிக்க பேறு வேறில்லாதவா
்களாயினார்; மேற்கூறிய எல்லாவற்றாலும் தமக்கு நிகரானார்
தாமேயல்லாது பிறரில்லை என்ன நிலைபெற்று அந்நிலையிலே
தலைசிறந்தவர்கள்;

     (வி-ரை.) செம்மை - திருநின்ற செம்மை - சிவத்தன்மை. அதனாற்
றணிந்த சிந்தை சிந்தையிற் சிவத்தன்மை நிறைய நிறைய ஆணவத்தன்மை
வலிகுறைந்துபடும். ஆணவம் வெப்பமிக்கு மேலெழு மியல்புடையதாதலின்
தீயது என்பார் அது வலி குறைந்த நிலையைத் தணிந்த என்றார்.

     “தணிந்தமனத் திருமுனிவர் தபோவனத்தி னிடைச்சார்ந்தார்“ -
கண் - புரா - 140 முதலிய திருவாக்குக்கள் காண்க. செம்மை என்பதற்கு
ஒழுக்கம் என்றும்,