பக்கம் எண் :


500 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     இன்னும் பலவாறும் ஆளுடைய பிள்ளையார் தமது திருவாலவாய்த்
தேவாரத்திலே இவ்வுண்மையை விரித்தருளினர்.

     வேண்டும் யாவையும் - வேண்டுவனவற்றைக் கொடுத்தலே சிறப்பு;

     வேண்டாத பொருள் தருதல் எத்துணைப் பெரிதாயினும் அது
சிறந்த கொடையாகாது என்பர் பெரியோர். இதனை “நாடிய பொருள்“ என்ற
இடத்துத் தமது கம்பராமாயண முதற்செய்யுட் சங்கோத்தர விருத்தியில்
ஆசிரியர் எமது மாதவச் சிவஞான முனிவர் விரித்தது காண்க.
“வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்“ - என்ற திருத்தாண்டகமும்
காண்க. யாவையும் - விரும்பியன வெவையாயினும். கொடுக்கத்தக்கது,
தகாதது என்பதின்றி. இது பிற்சரிதக் குறிப்பு.

     இல்லை என்னாதே இக்கடற்படி நிகழ முன் கொடுக்கும -
இது, “இல்லையே என்னாத“ - என்ற முதனூலின் விரிவுரையாம்.
இக்கடற்படி - கடல் சூழ்ந்த இந்த நிலவுலகம். நிகழ - சிவதருமவியல்
நின்று நிலவுமாறு “அடியாரவர் வான் புகழ் நின்றதெங்கு நிலவி
யுலகெலாம்“ என்றதும் காண்க. முன் கொடுக்கும - முன் - வேண்டுவார்
முன்பு - இடங்குறித்தது. காலங் குறித்ததாக கொண்டு, அவர் வேண்டு
முன்னரே குறிப்பறிந்து கொடுக்கும் என்றலுமாம். “யானே முன் செய்
குற்றேவல், ஒன்றிது தன்னை யென்னை யுடையவ ரருளிச் செய்ய நின்றது
பிழையாம்“ - (414) எனப் பின்னர்க் கூறும் வரலாற்றில் இதன்
விரிவு காண்க.

     இயல்பின் நின்றவர் - இது தாமாக முயன்று மேற்கொண்டு
நின்றதோர் ஒழுக்கம் என்னலாகாது, இஃதவரியல்பு என்னும்படி, அதில்
நிலைத்து நின்றவர், இஃதவர் பெயரின் பொருள் விரித்தவாறு.

     உலகியற் பகையார் - உலகில் விளங்கிய இயற்பகையார் என்ற
திருப்பெயர் பூண்டவர். அவர் நின்றது இயல்பு - ஆயின் அந்நிலையை
உலகம் இயலும் பகையாகக் கருதியது என்பது குறிப்பு. இயற்பகை என்ற
முதனூல் உலகியற்பகையார் என விரிந்தது.

     இயற்பகையார் - இது அவரது - இயற்பெயர். காரண இடுகுறியாய்
நிகழ்ந்தது போலும். இஃதவரது இயற்பெயரென்பது பின்னர்
“இயற்பகை

     பித்தனானால்“ (416); “இயற்பகை வெல்லும்“ - (419); “இயற்பகை
முனிவா வோலம்“ (432) என்பனவாதி வழக்குக்களாலறியலாம். இனி
எல்லா உடைமைகளையும் எனது எனது எனக் கொள்ளும் உலக
இயல்புக்குப் பகைமையுடையார் எனவும், எல்லாவற்றையும் எம்பிரான்
அடியவருடைமை எனக் கொள்ளும் உண்மையியலுக்குப் பகைமையில்லார்
எனவும் உடன்பாட்டினும் எதிர்மறையிலும் பொருந்தும் படி இயற்பகையார்
என்ற குறிப்பும் காண்க.  2

406. ஆறு சூடிய வையர்மெய் யடிமை  
       யளவி லாததோ ருளநிறை யருளா
னீறு சேர்திரு மேனியர் மனத்து
     நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கு
     மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த பேறெ
லாமவ ரேவின செய்யும்
     பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்,
3

407. ஆயு நுண்பொரு ளாகியும் வெளியே
 
       யம்ப லத்துநின் றாடுவா ரும்பர்
நாய கிக்குமஃ தறியவோ? பிரியா
     நங்கை தானறி யாமையோ? வறியோந்