| |
தூய
நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமுந் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதந் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.
|
4 |
406.
(இ-ள்.) ஆறு...முடித்து
- கங்கையைச் சடையிற்சூடிய
இறைவனது உண்மையாகிய அடிமைத் திறத்திலே அளவுபடாததாய
உள்ளத்திலே அருள் நிறைதலினாலே, நீறு பொருந்திய திருமேனியையுடைய
அடியவர்கள் தமது மனத்திலே எண்ணிய எல்லாவற்றையும் செய்கையிலே
நிறைவேற்றிக் கொடுத்து; மாறிலாத...என - மாறுபெறாத நல்வழியிற் சிறந்த
இல்லறத்தின் வாழ்கின்றதால் வருகின்ற சிறப்புக்களெல்லாம்
அவ்வடியவர்கள் இடுகின்ற ஏவல் எவையோ அவற்றைச் செய்து முடிக்கும்
பெருமையேயாம் என்று கொண்டு; பேணி வாழ்நாளில் - அக்கொள்கையின்
வழியினின்று தவறாமற் பாதுகாத்து வாழ்ந்து வருகின்ற நாளிலே; 3
407. (இ-ள்.)
ஆயும்...ஆடுவார் - சிவஞானத்தானாராய்தற்குரிய
மிக்க நுண் பொருளே யாகியும் யாவருங் காண வெளிப்படையாய்த்
திருச்சிற்றம்பலத்தில் நின்று ஆடுகின்ற; உம்பர் நாயகிக்கும்...அறியோம் -
மேலாந் தலத்தில் விளங்குகின்ற தமது நாயகியாராகிய உமாதேவியார் தாம்
இவ்வாறு கோலங்கொண்டு வந்து செய்யும் செயலை அறியும்படியாகவோ?;
அல்லது அவர் அதனை அறியாத வகையிலோ?; இன்னவாறென்று நாம்
அறியோம்; தூய...வேதியராய் - தூயதாகிய
திருநீறு தமது
பொன்மேனியிலே விளக்கம் பெறவும், (அதற்கு மாறாகத்) தூர்த்த
வேடமும் அத்திருமேனியிலே வெளிப்படையாய்த் தோன்றவும், ஒரு
வேதியராக உருவங் கொண்டு; மாய..வந்தார்
- தமது மறைப்பினிற்
போந்த உருவத்தினையே மேற்கொண்டு (உலகத்தார் காண அதனைக்
காட்டுதலே யன்றித்) தமது தொண்டராகிய இயற்பகையார் அடியவர்
வேண்டியவை எவையேயாயினும் இல்லை யென்னாது கொடுக்கும்
இயல்பினையும் காட்டும் பொருட்டு வந்தார். 4
406. (வி-ரை.)
ஆறு சூடிய - சடையில் என்பது
வருவித்துரைக்க.
ஆறு சூடுதல் உயிர்கள்பால் வைத்த கருணையைக் காட்டுவது. ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் என்றதற்குக் கங்கையின்
செருக்கடக்கிப் பிறையை வாழ்வித்த பெருமான் என்ற பொழிப்புரை
காண்க.
1307 ஐயர் அடிமை
- ஐயரது அடிமைத்திறம் என ஆறாம்
வேற்றுமை யுருபு விரிக்க. மெய்யடிமை - உளத்தில்
- ஐயர் நிறைக்கும்
அருள் எனக் கூட்டியுரைப்பினு மமையும்.
ஐயர்
- பெருமை யுடையவர்.
மெய் அடிமை அளவிலாதது ஒர் உளநிறை அருள்
- மெய்
அடிமை - எவ்வித வஞ்சனையுமின்றி உண்மையாகிய அடிமை செய்தல்.
யாவரும் அடிமைகளேயாயினும் அதனை நினைப்பதில்லை. நான்
என்பதனை முற்றும் அவர்க்கே ஆளாகச் செய்யும் அடிமைத் திறம்.
அளவிலாததோர் உளம்
- இவ்வடிமைத் திறம் இம்மட்டிற்
செல்லும், இவ்வளவிற்கு மேற் செல்லாது என்றதொரு அளவுட்படாது
எல்லையின்றிச் செல்கின்ற மனப்பான்மை. அளவு படாததோ ரன்போ
டையா றடைகின்ற போது என்று அப்பர் பெருமான் அருளியதும் காண்க.
நிறை அருள்
- அன்பினாலே அடிமைத் திறம் வரும். அடிமை
அளவின்றிச் செல்லுதலாலே அதன்கண் அருள் நிறையும். அடிமையால்
அருள்நிறை எனக் காரண காரியமாகக் கொள்க. ஆதலின் நிறை
அன்பென்னாது நிறை அருள் என்றார். நிறை அருளால்
- அருள்
நிறைதலால் - என மாற்றி யுரைக்க.
|