|
அருளால்
- முடித்து எனக் கூட்டுக. அவ்வாறு முடித்தற்கும்
பேறெலாம் பெருமையே எனப் பேணிவாழ்தற்கும் அருள் நிறைந்ததே
காரணமாம் என்பதாயிற்று.
அருளால் நீறுசேர்
திருமேனியர் - என்று கூட்டி, அருளின்
வழி நின்று நீறு பூசிய மேனியராகிய அடியவர் என்றுரைப்பது மொன்று.
மேனியர்தம் மனத்து
அருளால் நினைத்த - என்று கூட்டி,
தமக்கென்று ஒன்றும் கருதாது இறைவன்றிருவருள் வழியே நிற்கின்ற
அடியவர்கள் அவ்வருள் எழுவித்த குறிப்பின்படி நினைத்த
என்றுரைத்தலுமாம்.
நீறுசேர் திருமேனியர்
- மாறின்றித் திருநீறு தன்னியல்பாகப்
பொருந்திய விளக்கமுற்ற மேனி.
சேர்தல்
- இயல்பிற் பொருந்துதல் - மேனியின் இயலும்
நீற்றினியல்பும் தம்மிற் பொருந்துதலாம். “நீறுசேர்வதோர் மேனியர்“
(மேகராகக்குறிஞ்சி - திருப்பராய்த்துறை - 1) என்று ஆளுடைய
பிள்ளையார் ஆண்டவனுக்குச் சொல்லிய திருவாக்கினை ஆசிரியர்
இங்கு அடியவர்க்காக்கி எடுத்தாண்ட அழகு கண்டுகளிக்க. ஆண்டவனே
இங்கு அடியவர் வேடத்தாலணையும் சரிதக் குறிப்பாம்.
மனத்து நினைத்த
- தூயநீறு சேர்ந்த மேனியுள் நின்ற மனமும்
தூயதாம்; அதனுள் நினைத்தவை யாவும் தூயனவாம் என்பது குறிப்பு.
“பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்“ (141) என முன்னர்க் கூறிய
இலக்கணங் காண்க.
யாவையும்
- முற்றும்மை. நினைத்தவை எவையேயாயினும். சரித
நிகழ்ச்சிக் குறிப்பு.
வினைப்பட முடித்து
- நினைத்தவை தொழிற்படுமாறு செய்து
கொடுத்து; எண்ணம். தொழிலாக - செயலாக
மாறும்படிச் செய்து;
எண்ணம் அடியாருள்ளத்தே நிகழ்ந்தது, உடனே அது இவரிடத்துத்
தொழிலாய்ப் புறத்தே முற்றியது என்னும்படி. அவர் நினைப்பும் இவர்
செயலும்
ஒன்றேயாய் விளைய ஒற்றுமையும் விரைவும் குறித்தது.
மாறிலாத - ஒப்பற்ற. மறுக்கமுடியாத என்றலுமாம்.
நன்னெறியினில்வந்த
மனையறம் - இல்லறத்திற்கு இலக்கணமாய்
நூல்களில் விதித்த வழிகளில்
தவறாது நடந்து வரும் இல்வாழ்க்கை. இதனைத் திருக்குறள் முதலிய
நீதிநூல்களுட் காண்க. மனையறம்புரி மகிழ்ச்சியின் -
“இல்வாழ்வா
னென்பா னியல்புடைய மூவர்க்கு -
நல்லாற்றி னின்ற துணை“
“துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான்றுணை“
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை“ -
திருக்குறள். |
என்பனவாதி நியதிகளின்படி
நடத்தலால் மகிழ்ச்சியுளதாம். அதனால்
விளையும் பயனும் பலவாம். இவையே பேறு எனப்பட்டது. மகிழ்ச்சியாவது
ஈத்துவக்கு மின்பமும் - மனைவி மக்கள் ஒக்கல் முதலியோரால்
வருவனவுமாம்.
வந்த பேறெலாம்
- செய்யும் பெருமையேயாம். இப்பெருமையே
பெரிதாவதன்றி ஏனைய வெவையும் பெருமையன்று என்று கூட்டிக்கொள்க.
பேணி -
அக்கொள்கை தவறாது பாதுகாத்து. மேலே நீதி நூல்களிற்
கூறியமனையற நியதிகளும் இல்வாழ்க்கையின் பயனேயாயினும் இவை
பசுதர்மங்களேயாம்; சாமான்யமானவையும் அழியக்கூடியவையும் ஆகிய
தேவ போகங்களையே தருவன; பொன் விலங்கேபோல நின்று
முத்திபெறுதலைத் தடுக்கு மியல்புடையன; ஆதலின் இவை பந்தமேயாம்;
எனவே, இவை சாதாரண பலனேயாயொழிவன. இவ்வாறன்றி
அடியார்பணியோ எனின் பதிபுண்ணியமாய் ஞானத்திற்
கேதுவாய்ச் சிவானுபவந் தந்து சிவசாயுச்சிய நித்திய இன்பத்துக் கேதுவாம்.
ஆதலின் பேறெலாம் பெருமையே எனப் பேணினார் என்பது கருத்து.
அவர் ஏவின - அவ்வடியவர்களால் எவப்பெற்றன. அவர்
-
முன்சொன்ன நீறுசேர் திருமேனியரைச்
|