பக்கம் எண் :


இயற்பகை நாயனார் புராணம் 535

Periya Puranam

     ஆகின்றார். எதிர்காலத்து நிகழும் பொருள் நிகழ்காலத்தாற் கூறியது
நிச்சயம - உறுதி என்னும் பொருட்டு.

“வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ் வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை“
                   - வினையில் 48.

என்பது தொல்காப்பியம்.

     வாளால் இழைத்தவராகின்றார். அது உறுதி - தெளிந்த பொருள் -
என்றது தற்புகழ்ச்சியாகாது; போர் முதலியவற்றில் இவ்வாறு கூறல் மரபும்
இயல்புமாம். வேதியர்க்குத் தேற்றமும், பிழைத்த பகைவருளரேல் அவர்க்கு
அச்சமும் தருதலே கருத்தாலின் இஃதமையுமென்க.

     என்று - வந்து - எய்த - சொல்லல் - வருதல் - எய்துதல்
(சேர்தல்) மூன்றும் ஒருங்கே நிகழ்ந்தன. எய்த - மறைந்தனன் -
அவ்வாறே அவர் சேர்தலும் இவர் மறைதலும் ஒருங்கே நிகழ்ந்தன.

     குழை - சங்கக்குழை. குழைப்பொலிகாது - குழையைப் பொலிவித்த
காது என்றலுமாம்.  கோலங் கொள்வான் - முன் பூண்டு வந்ததும் ஒரு
கோலமேயாயினும் அதுமாய வண்ணமாகித் தந்தொண்டர் மறாத வண்ணத்தை
உலகர்க்குக் காட்டக் கொண்டதாம். அக்கோலங் கொண்ட செயல் முற்றவே
அதனை மறைத்தனர். இனிக் கொள்ளும் கோலம் நாயனார்க்கும்
மனைவியார்க்கும் அருளக் கொள்வது. கொளவான் - வானீற்று வினையெச்சம்
கொள்ளும் பொருட்டு என்க. மறைந்த விரைவுபற்றி வினைமுற்றை முன்னர்க்
கூறி அதனைக் கொண்டு முடியும் வினை யெச்சத்தைப் பின்னர் வைத்தார்.
வேதியக்கோலம் திரோதானசத்தி கூடியது. இனிக் கொள்ளும் கோலம்
அருட்சத்தியுடன் கூடியது. அக்கோலம் வரும் பாட்டிற் காண்க. உம்மை
இறந்தது தழுவியது.  30

434. சென்றவர் முனியைக் காணார்; சேயிழை
                       தன்னைக் கண்டார்;

 
  பொன்றிகழ் குன்று வெள்ளிப் பொருப்பின்மேற்
                      பொலிந்த தென்னத்
தன்றுணை யுடனே வானிலே றலைவனை
                     விடைமேற் கண்டார்;
நின்றிலர்; தொழுது வீழ்ந்தார்; நிலத்தினின்
                    றெழுந்தார்; நேர்ந்தார்
.
31

435. “சொல்லுவ தறியேன்! வாழி! தோற்றிய தோற்றம்
                                 போற்றி!
 
  வல்லைவந் தருளி யென்னை வழித்தொண்டு
                       கொண்டாய் போற்றி!
எல்லையி லின்ப வெள்ள மெனக்கருள் செய்தாய்
                                 போற்றி!
தில்லையம் பலத்து ளாடுஞ் சேவடி போற்றி;
                                  யென்று
32

436. விண்ணிடை நின்ற வெள்ளை விடைய ரடியார்
                               தம்மை
 
  எண்ணிய வுலகு தன்னி லிப்படி நம்பா லன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம்; பழுதி
                               லாதாய்!
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போது“
                               கென்று.
33

437. திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர்
                          தமக்குந் தேற்ற
 
  மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந்
                                   தக்க
பெருகிய வருளி னீடு பேறளித் திமையோ
                                 ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும் பொற்பொது
                          வதனுட் புக்கார்.
34

     434. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு சொல்லிச் சென்று சேர்ந்தாராகிய
நாயனார் சிவவேட முனிவரை அங்குக் கண்டிலர்; ஆனால் அம்மையாரை
மட்டுங்